செம்ம டிமாண்ட்.. ரூ.12,749-க்கு 6000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் வாவ் டீல் (Flipkart Wow Deal) என்னும் சிறப்பு விற்பனையில் 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே போன்ற பக்காவான பீச்சர்களுடன் வெளியான ஹெச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களுடன் விலை, தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இந்த விலையே 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,749 விலைக்கு இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட ஈஎம்ஐ சலுகையிலும் இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். காஸ்மிக் லாவெண்டர் (Cosmic Lavender), நார்டிக் ப்ளூ (Nordic Blue), பீச் பிங்க் (Peach Pink) மற்றும் ஒயின் ரெட் (Wine Red) கலர்களில் கிடைக்கிறது. டூயல் கேமரா சிஸ்டம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) கொண்ட மாடலாக கிடைக்கிறது.
ஹெச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G Specification): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளன.
மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. செல்பீ, வீடியோ கால்களுக்கு 8 எம்பி கேமரா உள்ளது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. ஸ்லிம் ஸ்மார்ட்போனை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஸ்மார்ட்போன் பக்காவாக இருக்காது. ஏனென்றால், 6000mAh பேட்டரியுடன் 8.6 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. அதேபோல 210 கிராம் எடையில் கிடைக்கிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்ட மாடலாக இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) உள்ளன. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது.
டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) டேட்டா கனெக்டிவிட்டிகள் உள்ளன. மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டிகளையும் இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
