கொளுத்தி போட்ட சேல்.. ரூ.12,349 போதும்.. 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியான ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை மீண்டும் தொடங்குகிறது. இதனால், மறுபடியும் அடித்து பிடித்து ஆர்டர் செய்ய பட்ஜெட் பிரியர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் நாளை (ஜூன் 3) நண்பகல் 12 மணி முதல் இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை மீண்டும் தொடங்குகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.650 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.12,349 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,175 தள்ளுபடியும் கிடைக்கிறது.
காஸ்மிக் லாவெண்டர் (Cosmic Lavender), நார்டிக் ப்ளூ (Nordic Blue) மற்றும் பீச் பிங்க் (Peach Pink) ஆகிய கலர்களில் இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இண்டஸ் ஏஐ (Indus AI) கொடுத்துள்ளது. 50 எம்பி கேமரா, IP64 ரேட்டிங் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களையும் கொடுக்கிறது.
எச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G Specification): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட இந்த டிஸ்பிளேவில் வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) செல்பீ கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக உள்ளது.
மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட்டை இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளன.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் செட்டப்பை (Dual Rear Setup) இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி மாடல் கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 8.6 எம்எம் தடிமன் பாடியில் 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும் 210 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) ஆகிய கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஜாக் கிடைப்பதால், டைப்-சி சார்ஜிங் (USB Type-C) போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications