Home
Mobile

மே 21 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. வருகிறது HMD 5ஜி போன்.. எந்த மாடல்?

நீண்ட நாட்களுக்கு பிறகு எச்டிஎம் நிறுவனம் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் வரும் மே 21-ம் தேதி இந்தியாவில் எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.

எச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மே 21 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது HMD 5ஜி போன்..

தரமான அக்டோ கோர் யுனிசார் சிப்செட் உடன் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

6000mAh பேட்டரி உடன் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

 மே 21 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது HMD 5ஜி போன்..

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் நிறங்களில் இந்த போன் வெளியாகும்.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த எச்எம்டி போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
HMD Vibe 2 5G India launch date revealed: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X