Home
Mobile

ஆரம்பமே சூப்பர் ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வருகிறது புது HMD 5ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

எச்எம்டி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை இன்று முதல் முறையாக விற்பனைக்கு கொண்டுவருகிறது. அதாவது இந்த போனை இன்று பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். இப்போது எச்எம்டி வைப் 2 5ஜி போனின் அம்சங்கள், விலை மற்றும் சலுகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

எச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G specifications): தரமான யுனிசாக் டி8200 6என்எம் பிராசஸர் (Unisoc T8200 6nm processor) உடன் இந்த புதிய எச்எம்டி வைப் 2 5ஜி போன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

ஆரம்பமே சூப்பர் ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வருகிறது புது HMD 5ஜி போன்..

அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1600 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

அதுவும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) மற்றும் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) வசதிகளும் இந்த போனில் உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி இந்த புதிய எச்எம்டி வைப் 2 5ஜி போனில் உள்ளது.

எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆரம்பமே சூப்பர் ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வருகிறது புது HMD 5ஜி போன்..

இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 80211 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் அந்த போனில் உள்ளன. காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,999-ஆக உள்ளது. வரும் மே 26-ம் தேதி இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.9,499 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

English summary
HMD Vibe 2 5G goes on sale today for the first time in India: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X