மொத்த சாம்ராஜ்யம் தவம் கிடக்குது.. இந்த HMD டச் 4ஜி போனுக்கு.. 32GB மெமரி.. 2MP கேமரா.. வெறும் ரூ.3999 போதும்!
இந்திய மார்கெட்டே எதிர்பார்த்து கொண்டிருந்த எச்எம்டி டச் 4ஜி (HMD Touch 4G) ஸ்மார்ட்போன் மீண்டும் ஆர்டர் செய்ய கிடைக்க இருக்கிறது. ஹைபிரிட் மாடலாக வெளியாகி இருக்கும் இந்த எச்எம்டி டச் 4ஜி போனில் 2 எம்பி கேமரா, 1950mAh பேட்டரி, 64 எம்பி ரேம் போன்ற பீச்சர் மாடல்களின் அம்சங்களும், வை-பை, 4ஜி எல்டிஇ போன்ற ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் வருகின்றன. இந்த எச்எம்டி டச் 4ஜி போனின் விவரங்களை பார்க்கலாம்.
டிசம்பர் 19ஆம் தேதி முதல் இந்த எச்எம்டி டச் 4ஜி போன் மீண்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. அக்டோபர் மாதத்தில் வெளியாகிய பிறகு இப்போது மீண்டும் ஸ்டாக் கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் ரூ.3,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். சியான் (Cyan) மற்றும் டார்க் ப்ளூ (Dark Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. லிமிடெட் ஸ்டாக் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

ஆகவே, உடனடியாக விற்றுப்போக வாய்ப்புள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆர்டர் செய்யலாம். ரீடெயில் ஸ்டோர்கள் மற்றும் எச்எம்டி தளங்களில் விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் எதிர்பார்க்கலாம். பீச்சர் போன் போன்ற பீல் கொடுத்து, அதில் தேவையான ஸ்மார்ட்போன் பீச்சர்களையும் இந்த எச்எம்டி பேக் செய்துள்ளது.
எச்எம்டி டச் 4ஜி அம்சங்கள் (HMD Touch 4G Specifications): 3.2 இன்ச் கியூவிஜிஏ (QVGA) டிஸ்பிளேவை இந்த எச்எம்டி டச் 4ஜி கொண்டுள்ளது. இந்த டச் டிஸ்பிளேவானது (Touch Display) 2.5டி கவர் கிளாஸ் கொடுக்கிறது. இந்த டச் சப்போர்ட் போக வால்யூம் கீஸ் (Volume Keys), பவர் கீ (Power Key) மற்றும் குயிக் கால் பட்டன் (Quick Call Button) போன்ற கன்ட்ரோல்களும் கிடைக்கின்றன.
செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 0.3 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. எல்இடி பிளாஷ் கொண்ட 2 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. இந்த விலைக்கு தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்க யுனிசோக் டி127 (Unisoc T127) சிப்செட் மற்றும் ஆர்டிஓஎஸ் டச் (RTOS Touch) கொண்டுள்ளது. 64 எம்பி ரேம் கொண்ட இந்த எச்எம்டி டச் 4ஜி போனுக்கு 128 எம்பி மெமரி கிடைக்கிறது.
மேலும், 32 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டை இந்த போனில் பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்மார்ட்போன்களை போல டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுத்துள்ளது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸை இந்த எச்எம்டி டச் 4ஜி போன் கொடுக்கிறது. 1950mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது.
இந்த பேட்டரிக்கு 30 மணி நேரங்கள் பேக்கப் கிடைக்கும். பீச்சர் மாடலாக இருப்பதால் 10.85 எம்எம் தடிமன் உள்ளது. ஆனால், மொத்தமாகவே 100 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளது. இந்த எச்எம்டி டச் 4ஜி போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 1 ஸ்பீக்கர் மற்றும் 1 மைக்ரோபோன் கிடைக்கிறது. வயர்லெஸ் எப்எம் ரோடியோ கிடைக்கிறது.
இந்த எச்எம்டி டச் 4ஜி போனின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், 4ஜி வோஎல்டிஇ சிஏடி4 (4G LTE CAT4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 11 4ஜி பேண்ட்களின் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும், வோஎல்டிஇ (VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








