புரட்டி போட்டுருச்சு.. ரூ.3999 க்கு செம்ம டிமாண்ட்.. டச் டிஸ்பிளே.. 2MP கேமரா.. 1950mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை தாறுமாறாக எகிறி வரும் நேரத்தில் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதில் எச்எம்டி டச் 4ஜி (HMD Touch 4G) போனானது தள்ளுபடி விலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குட்டி ஸ்மார்ட்போனை விரும்புபவர்களுக்கு ஏற்ற டிசைனில் கிடைப்பதால், விற்பனை பட்டையை கிளப்புகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.3,999 விலைக்கு இந்த எச்எம்டி டச் 4ஜி போன் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் ஈஎம்ஐ சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, மலிவான விலைக்கு இந்த எச்எம்டி டச் 4ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

ஹைபிரிட் மாடல்கள் மிகவும் குறைவாக கிடைக்கின்றன. இந்தியாவில் கிடைக்கும் ஒரே ஹைபிரிட் மாடலாக இந்த எச்எம்டி டச் 4ஜி போன் கிடைப்பதால், டிமாண்ட்டில் விற்பனையாகிறது. இப்போது, அமேசான் தளத்தில் ஸ்டாக் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், இல்லாமல் போகலாம். ஆகவே, உடனடியாக வாங்கி கொள்ளுங்கள்.
எச்எம்டி டச் 4ஜி அம்சங்கள் (HMD Touch 4G Specifications): 3.2 இன்ச் கியூவிஜிஏ (QVGA) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. இது டச் சப்போர்ட் கொடுக்கிறது. 4ஜி மாடலாக இருப்பதால், யுனிசோக் டி127 ப்ராசஸர் (Unisoc T127 Processor) கொடுத்துள்ளது. 64 எம்பி ரேம் மற்றும் 128 எம்பி மெமரியை இந்த எச்எம்டி டச் 4ஜி போன் கொடுத்து இருக்கிறது.
மேலும், 32 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுத்துள்ளது. ஆர்டிஓஎஸ் டச் (RTOS Touch) கிடைக்கிறது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஃபிளாஷ் (Flash) சப்போர்ட் கொண்ட 2 எம்பி ரியர் கேமராவை இந்த எச்எம்டி டச் 4ஜி கொடுக்கிறது. 0.3 எம்பி விஜிஏ (VGA) செல்பீ கேமராவை கொடுக்கிறது.
30 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 1950mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 10.85 எம்எம் தடிமன் வருகிறது. ஆனால், வெறும் 100 கிராம் எடை மட்டுமே கொடுத்துள்ளது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ப்ரூப் (Dust & Splash Proof) கொண்ட மாடலாக இந்த எச்எம்டி டச் 4ஜி போன் விற்பனைக்கு கிடைக்கிறது.
யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் (USB Type-C Charging Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 4ஜி எல்டிஇ சிஏடி4 (4G LTE CAT4), வோஎல்டிஇ (VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஆகிய கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. மேலும், ஜிபிஎஸ் (GPS) மற்றும் பெய்டூ (Beidou) கனெக்டிவிட்டிகள் உள்ளன.
வை-பை கிடைப்பதால், ஹாட்ஸ்பாட் (Hotspot) பயன்படுத்தி கொள்ள முடியும். வீடியோ கால்கள், டெக்ஸ்ட் உள்ளிட்டவைக்கு எக்ஸ்பிரஸ் சாட் ஆப் (Express Chat App) கிடைக்கிறது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சப்போர்ட் கொடுத்துள்ளது. சியான் (Cyan) மற்றும் டார்க் பிளாக் (Dark Blue) ஆகிய கலர்களில் இந்த எச்எம்டி டச் 4ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் ஸ்டோர்களில் அடிக்கடி அவுட் ஆஃப் ஸ்டாக் சென்றுவிடும் மாடல்களில் இந்த எச்எம்டி டச் 4ஜி போனும் இருக்கிறது. ஏனென்றால், ஹைபிரிட் மாடலாக இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்புகிறது. அமேசான் தளத்தில் சில ஸ்டாக்குகள் கிடைப்பதால், இதை கஸ்டமர்கள் போட்டிப்போட்டு கொண்டு ஆர்டர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications