Home
Mobile

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் புது HMD போன்.. நாளை அறிமுகம்.. குட்டி டிஸ்பிளே.. எந்த மாடல்?

நோக்கியா பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தைக் கொண்டுள்ள எச்எம்டி நிறுவனம் தனது புதிய எச்எம்டி டச் 4ஜி ஹைப்ரிட் போனை நாளை (டிசம்பர் 19) அறிமுகம் செய்ய உள்ளது. சிறிய டச் டிஸ்பிளே, யுனிசாக் பிராசஸர், 30 மணி நேரம் பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த புதிய போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி டச் 4ஜி அம்சங்கள் (HMD Touch 4G specifications): 3.2-இன்ச் QVGA டச் டிஸ்பிளே உடன் இந்த புதிய எச்எம்டி போன். சிறிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இந்த குட்டி ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி நிறுவனம்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் புது HMD போன்..

64எம்பி ரேம் மற்றும் 128எம்பி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது எச்எம்டி டச் 4ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளது.

பிளாஸ் ஆதரவு கொண்ட 2எம்பி ரியர் கேமராவுடன் புதிய எச்எம்டி டச் 4ஜி ஹைப்ரிட் போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 0.3எம்பி விஜிஏ கேமரா ஆதரவும் இதில் உள்ளது. அதேபோல் ஹாட்ஸ்பாட் மற்றும் வைஃபை ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சிறிய போன்.

தரமான யுனிசாக் டி127 பிராசஸர் (Unisoc T127 processor) உடன் எச்எம்டி டச் 4ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) உடன் இந்த போன் வெளிவரும்.

3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எஃப்எம் ரேடியோ (FM Radio), எம்பி பிளேயர் (MP3 player) உள்ளிட்ட வசதிகளும் இந்த புதிய எச்எம்டி டச் 4ஜி போனில் உள்ளது. குறிப்பாக மேப்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய எச்எம்டி போன். பின்பு சாட் ஆப்களை இந்த போனில் பயன்படுத்த முடியும்.

1950mAh பேட்டரி உடன் எச்எம்டி டச் 4ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் 30 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. வால்யூம் கீஸ் (Volume Keys), பவர் கீ (Power Key) மற்றும் குயிக் கால் பட்டன் (Quick Call Button) போன்ற கன்ட்ரோல்களும்) போன்ற கன்ட்ரோல்களும் இந்த போனில் உள்ளன.

4ஜி வோஎல்டிஇ சிஏடி4 (4G LTE CAT4), வோஎல்டிஇ (VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 100 கிராம் ஆகும். சியான் (Cyan) மற்றும் டார்க் ப்ளூ (Dark Blue) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

எச்எம்டி டச் 4ஜி போன் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும். எச்எம்டி.காம், ரீடெயில் ஸ்டோர்கள் மற்றும் முன்னணி ஆன்லைனில் தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் விலை ரூ.3,999 என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Touch 4G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X