Home
Mobile

பழைய NOKIA ஆஷா போன்.. புது லுக்கில் மீண்டும் அறிமுகம்.. 4G ஆதரவுடன் ஆளுக்கு 2 வாங்கும் விலையில்!

10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பழைய நோக்கியா ஆஷா போன்களை (NOKIA Asha Phone) நினைவூட்டும் படியாக, நோக்கியா பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது எச்எம்டி டச் 4ஜி (HMD Touch 4G) என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது இந்த மாடலை - "இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஹைப்ரிட் போன்" (First hybrid phone launched in India) என்று கூறுகிறது அதாவது இது ஒரு ஃபீச்சர் போனுக்கும், ஸ்மார்ட்போனுக்கும் (Feature Phone - Smartphone) இடையே ஒரு பாலமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய NOKIA ஆஷா போன்.. புது லுக்கில் மீண்டும் அறிமுகம்.. 4G ஆதரவுடன்!

எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 3.2-இன்ச் க்யூவிஜிஏ (QVGA)டச் ஸ்க்ரீன், டூயல் சிம் இணைப்புக்கான ஆதரவு மற்றும் ஃபிளாஷ் யூனிட் உடன் 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ், எஸ்30 பிளஸ் டச் யூஸர் இன்டர்பேஸ் மற்றும் குவிக்-கால் பட்டன் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான, முழு அம்சங்கள்: இது 2.5டி கவர் கிளாஸுடன் கூடிய 3.2 இன்ச் க்யூவிஜிஏ டச்-சப்போர்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி127 (Unisoc T127) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

டூயல் (நானோ) சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டர்னல் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. எச்எம்டி நிறுவனத்தின் இந்த சமீபத்திய 4ஜிபோன் ஆனது எஸ்30 பிளஸ் டச் அவுட் ஆஃப் தி பாக்ஸ் கொண்டு இயங்குகிறது.

சுவாரசியமாக இது கிளவுட் ஆப்ஸ் சூட்டை ஆதரிக்கிறது, இதில் கிரிக்கெட் ஸ்கோர்கள், நியூஸ், வானிலை அப்டேட்கள், டிவைஸிற்கு நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும் வீடியோ, சோஷியல் மற்றும் பயன்பாட்டு ஆப்கள் ஆகியவைகளும் அடங்கும். கூடவே இது டெட்ரிஸ் மற்றும் சுடோகு போன்ற எச்டிஎம்எல்5 கேம்களுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது

கேமராவை பொறுத்தவரை எச்எம்டி டச் 4ஜி போன் ஆனது எல்இடி ஃபிளாஷ் யூனிட் (LED Flash Unit) உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் உடன் வருகிறது. அதே நேரத்தில் முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 0.3-மெகாபிக்சல் விஜிஏ சென்சார் உள்ளது.

மேலும் எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போனில் ஐஸ் (ICE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன் கேஸ் ஆப் எமர்ஜென்சி (In Case of Emergency) கீ என்று அழைக்கப்படும் குவிக்-கால் பட்டனும் (Quick-call button) பொருத்தப்பட்டுள்ளது. இதை மூன்று குறுகிய கிளிக்குகள் அல்லது ஒரு நீண்ட அழுத்தத்தின் மூலம் செயல்படுத்தலாம்.

மேலும் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) டிவைஸ்களுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய எக்ஸ்பிரஸ் சாட் ஆப்பை (Express Chat app) பயன்படுத்தி, எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு மெசேஜ் மற்றும் வீடியோ கால் (Message and Video Call) செய்யலாம்.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை,எச்எம்டி டச் 4ஜி ஆனது 4ஜி எல்டிஇ, வோல்ட்இ (VoLTE), வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பெய்டு (Beidou), ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த போனில் வயர்டு மற்றும் வயர்லெஸ் எப்எம் ரேடியோ மற்றும் எம்பி3 பிளேயருக்கான ஆதரவும் உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை எச்எம்டி டச் 4ஜி போன் ஆனது 2000mAh மாற்றக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஹைப்ரிட் போன் அளவீட்டில் 102.3×61.85×10.85மிமீ மற்றும் எடையில் 100 கிராம் உள்ளது.

எச்எம்டி டச் 4ஜி ஹைபிரிட் போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போனின் 64 ஜிபி ரேம் + 128 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.3,999 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது எச்எம்டி இந்தியா வலைத்தளம் () வழியாக சியான் மற்றும் டார்க் ப்ளூ ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் விற்கப்படுகிறது. இது விரைவில் இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகள் மூலம் வாங்க கிடைக்கும் என்று எச்எம்டி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Touch 4G Hybrid Phone Which Reminds Old Nokia Asha Phones Launched in India For Rs 3999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X