பேக் டூ ஃபார்ம் வா தலைவா.. 6000mAh பேட்டரி, 50MP ரியர், 50MP செல்பீ, 8GB ரேம் உடன் புது HMD போன்.. எந்த மாடல்?
நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல. நேற்றுதான் இந்நிறுவனம் இந்திய சந்தையில் எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) என்கிற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.
இதற்கிடையில் தற்போது, எச்எம்டி தண்டர் ப்ரோ (HMD Thunder Pro) என்கிற, இந்நிறுவனத்தை அடுத்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. டிப்ஸ்டர் @smashx_60 வழியாக லீக் ஆன ரெண்டர் (புகைப்படம்), எச்எம்டி தண்டர் ப்ரோ ஸ்மார்ட்போனை ஒரு டார்க் ஆன கலரில் காட்டுகிறது.

பேக் பேனலின் மேற்பகுதிக்கு அருகில் ஒரு கிடைமட்ட கேமரா ஐலேண்ட் இருப்பது போல் தெரிகிறது, அதில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவை உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்றே வட்டமான மூலைகளுடன் கூடிய ஒரு பிளாட்-பிரேம் டிசைனை கொண்டிருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில் முன்புறம் மெல்லிய பெசல்கள் மற்றும் செல்பீ கேமராவிற்காக மையத்தில் அமைந்துள்ள ஒரு ஹோல்-பஞ்ச் கட்அவுட்டை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஆகியவை எச்எம்டி தண்டர் ப்ரோ ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் லீக் ஆன ரெண்டர் காட்டுகிறது.
எச்எம்டி தண்டர் ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எச்எம்டி_மீல்ஸ் (HMD_MEME'S - @smashx_60) எக்ஸ் தள பக்கத்தில் மற்றொரு பதிவின்படி, எச்எம்டி தண்டர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்உடன் கூடிய 6.67-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை இது 2.2GHz வரை கிளாக் செய்யப்பட்ட யூனிசாக் டி620 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 20W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி தண்டர் ப்ரோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும், செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கும் என்றும் வெளியான லீக் குறிப்பிடுகிறது.
எச்எம்டி தண்டர் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது என்எப்சி (NFC) இணைப்பை ஆதரிக்கும் என்றும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்பீக்கர்கள், இரண்டு மைக்ரோஃபோன்கள் மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறித்த விவரங்கள் இல்லை.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில், எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.10,999 என்றும், ஹை-எண்ட் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இது காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது பிளிப்கார்ட் வழியாக மே 26 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். விற்பனையின் முதல் நாளில் மட்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் அல்லது யுபிஐ பரிவர்த்தனை மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 சிறப்பு உடனடி தள்ளுபடியை பெறலாம். இதன்கீழ் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.9499 க்கும் மற்றும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.10,499 க்கும் கொண்டு வர முடியும்.
எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் யூனிசாக் ப்ராசஸர்
- 4GB ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 18W வயர்டு சார்ஜிங் ஆதரவு கொண்ட 6000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications