அதிரவிடும் விலை..108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 256GB மெமரி.. அறிமுகமானது HMD போன்.. எந்த மாடல்?
நோக்கியா போன்களை அறிமுகம் செய்துவந்த எச்எம்டி நிறுவனம் புதிய எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா, 256ஜிபி மெமரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது எச்எம்டி ஸ்கைலைன் போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
எச்எம்டி ஸ்கைலைன் அம்சங்கள் (HMD Skyline Specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது எச்எம்டி ஸ்கைலைன் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. அதேபோல் இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் வசதியுடன் எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது இந்த போன். ஆனாலும் 2 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
Hybrid OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ், 4கே வீடியோ பதிவு, OZO ஸ்பேஷியல் ஆடியோ கேப்சர், ஆட்டோ ஃபோகஸ் உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், OZO பிளேபேக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இந்த புதிய எச்எம்டி போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ((Dust & Water Resistance)உடன் வருகிறது எச்எம்டி ஸ்கைலைன் போன்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 802.11 ax), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் (GPS/A-GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்விட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

4600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 15 வாட்ஸ் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.43,340-ஆக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








