அதிரவிடும் விலை.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 256GB மெமரி.. புதிய HMD போன் ரெடி.. எந்த மாடல்?
நோக்கியா போன்களை தயாரித்து வந்த எச்எம்டி (HMD) குளோபல் நிறுவனம் தற்போது எச்எம்டி பெயரில் போன்களை அறிமுகம் செய்யத் துவங்கிவிட்டது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) போனின் அறிமுக தேதி வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
எச்எம்டி ஸ்கைலைன் போன் ஆனது வரும் ஜூலை மாதம் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜூலை 10 (July 10) ஆம் தேதி பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

எச்எம்டி ஸ்கைலைன் அம்சங்கள் (HMD Skyline specifications): ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி ( FHD+ OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த எச்எம்டி ஸ்கைலைன் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 2 chipset) வசதியுடன் இந்த புதிய எச்எம்டி ஸ்கைலைன் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் பல்வேறு கேமிங் அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4900எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் இந்த போனில் உள்ளது.
ஐபி67 ரேட்டிங் (IP67 Rating) கொண்டுள்ளது இந்த எச்எம்டி போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளம், 5ஜி ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ரூ.47,400 விலையில் இந்த புதிய எச்எம்டி ஸ்கைலைன் போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications