சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 256GB மெமரி.. அறிமுகமானது புதிய HMD போன்.. எந்த மாடல்?
எச்எம்டி நிறுவனம் எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இதே போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய எச்எம்டி ஸ்கைலைன் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
எச்எம்டி ஸ்கைலைன் அம்சங்கள் (HMD Skyline Specifications): ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் எச்எம்டி ஸ்கைலைன் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது இந்த போன். ஆனாலும் 2 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

குறிப்பாக 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (POLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hybrid OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ், 4கே வீடியோ பதிவு, OZO ஸ்பேஷியல் ஆடியோ கேப்சர், ஆட்டோ ஃபோகஸ் உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், OZO பிளேபேக் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 802.11 ax), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் (GPS/A-GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்விட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. நியான் பிங்க் (Neon Pink), ட்விஸ்டட் பிளாக் (Twisted Black) நிறங்களில் இந்த போன் வாங்கக் கிடைக்கும்.

மேலும் 4600mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 15W மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட எச்எம்டி ஸ்கைலைன் போனின் விலை ரூ.35,999-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி இந்த புதிய எச்எம்டி ஸ்கைலைன் போன் அமேசான், எச்எம்டி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications