சீன போன்களை ஓடவிட்டு போகுது HMD.. 200MP கேமரா.. மொத்தம் 4 புது மாடல்.. எப்போது அறிமுகம்?
எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் தான் தற்போது நோக்கியா (Nokia) பிராண்டின் உரிமையை கொண்டுள்ளது. எச்எம்டி நிறுவனம் தற்போது அதன் புது ஸ்மார்ட்போன் (Smartphone) வரிசையை அறிமுகம் செய்வதில் மிகவும் மும்முரமாக இருக்கிறது. இதற்கு நடுவே எச்எம்டி நிறுவனம் பழைய நோக்கியா லூமியா (Nokia Lumia) தோராற்றில் அதன் புதிய எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய எச்எம்டி ஸ்கைலைன் போனில் 4 விதமான கேமரா அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு மாடல் 200MP கேமராவை பெறுகிறது.
நோக்கியாவின் உரிமையை கொண்டுள்ள HMD குளோபல் நிறுவனம், அதன் வரவிருக்கும் ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் தொடரின் மூலம், பழைய நோக்கியா லூமியா சீரிஸ் மாடல் பெயரை உலகளவில் மீண்டும் புதிதாக புதுப்பிக்க பார்க்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், எச்எம்டி நிறுவனம் அதன் எச்எம்டி ஸ்கைலைன் என்ற புதிய ஃபோனில் வேலை செய்வதை லீக் தகவல்கள் உறுதிப்படுத்தின.

எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline):
நாம் இதுவரை பார்த்த ரெண்டர்கள், கிளாசிக் நோக்கியா லூமியா வரிசையை நினைவூட்டும் வகையில் ஸ்கைலைன் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நம்பகமான டிப்ஸ்டர் @smashx_60 வெளியிட்டுள்ள தகவலின் படி,HMD Skyline வரிசையில் G2 எனப்படும் இரண்டாவது ஸ்கைலைன் சாதனத்தில் HMD வேலை செய்வதை வெளிப்படுத்தியுள்ளது.
இது முதல் ஸ்கைலைனுக்கு நேரடி வாரிசா அல்லது முற்றிலும் தனி சாதனமா என்பது இன்னும் தெளிவாக நமக்கு தெரியவில்லை. ஆனால், முதல் ஸ்கைலைன் டிவைஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், G2 இன் வெளியீடு வெகு தொலைவில் இருப்பது போல் தெரிகிறது. அல்லது ஸ்கைலைன் மாடலுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முதல் ஸ்கைலைனைப் போலவே, G2 ஆனது பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று லீக் தகவல் கூறுகிறது. இதன் கேமரா அமைப்பு எப்படி இருக்கும் என்று விபரம் தெளிவாகவில்லை. ஆனால், இந்த சாதனத்தில் என்ன கேமரா சென்சார்கள் இடம்பெறும் என்று தற்போது தெரிய வந்துள்ளது. டிப்ஸ்டர் தகவல் படி, நான்கு சாத்தியமான காம்பினேஷனில் கேமரா எதிர்பார்க்கப்படுகிறது.
200MP உடன் புதுசா எச்எம்டி ஸ்கைலைன் ஜி2 (HMD Skyline G2 with 200MP Camera):
இதில் ஒரு மாடல், 108MP + 12MP + 8MP போன்ற கேமரா அமைப்புடன் ஒரு மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளமைவுகளைப் பகிர்ந்துள்ளார், அவற்றில் ஒன்று 200MP பிரதான கேமராவையும் உள்ளடக்கியது. அதேபோல், 108MP + 12MP + 12MP போன்ற கேமரா அமைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், 50MP + 50MP + 50MP கேமராவை பெரும் என்று கூறப்படுகிறது.
இரண்டு ஸ்கைலைன்களுக்கு இடையிலான மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு பெசல்களாக இருக்குமென்று கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, G2 மேல் மற்றும் கீழ் இரண்டிலும் தடிமனான பேசல்களை பெரும் என்று கூறப்படுகிறது. எச்எம்டி நிறுவனத்தின் அசல் ஸ்கைலைன் கசிவு போலல்லாமல், இதில் விவரக்குறிப்புகள் மற்றும் விலைத் தகவல்கள் அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் எச்எம்டி ஸ்கைலைன் G2 பற்றிய விவரங்கள் அரிதானவை. HMD ஸ்கைலைன் G2 இன் ஹார்ட்வேர், சாப்ட்வேர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதை விரைவில் உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








