மிரண்டு போன மார்க்கெட்.. 108எம்பி கேமரா.. ஐபி67 ரேட்டிங்.. வருகிறது புது HMD போன்கள்.. எந்த மாடல்?
எச்எம்டி நிறுவனம் கடந்த ஆண்டு எச்எம்டி ஸ்கைலைன் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் எச்எம்டி ஸ்கைலைன் 2 (HMD SKYLINE 2) மற்றும் எச்எம்டி ஸ்கைலைன் 2 ஜிடி (HMD SKYLINE 2 GT) ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது எச்எம்டி நிறுவனம். அதாவது இந்த போன்கள் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு எச்எம்டி போன்களின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
எச்எம்டி ஸ்கைலைன் 2 அம்சங்கள் (HMD SKYLINE 2 specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் எச்எம்டி ஸ்கைலைன் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம்(Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் 2 போன். 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி இந்த எச்எம்டி போனில் உள்ளது. மேலும் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் 2 ஸ்மார்ட்போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா,யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த எச்எம்டி போனில் உள்ளன.
எச்எம்டி ஸ்கைலைன் 2 ஜிடி அம்சங்கள் (HMD SKYLINE 2 GT specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் எச்எம்டி ஸ்கைலைன் 2 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் 2 ஜிடி போன். 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி இந்த எச்எம்டி போனில் உள்ளது. மேலும் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் 2 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா, யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஐபி67 ரேட்டிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த எச்எம்டி ஸ்கைலைன் 2 ஜிடி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications