Home
Mobile

மாஸ் HMD மொபைலின் சேல் ஆரம்பம்.. பட்ஜெட் விலை.. 108MP கேமரா.. 12GB ரேம்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? விலை?

ஹியூமன் மொபைல் டிவைஸ் (HMD) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்று துவங்கியுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பாரம்பரியமான நோக்கியா (Nokia) ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் விரும்பிகளின் கவனைத்தையும் HMD நிறுவனம் இன்று ஈர்த்துள்ளது. அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தின் விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த புதிய போன் பார்ப்பதற்கு பழைய நோக்கியா லூமியா சாயலில் காணப்பட்டாலும், புதிய சக்தியுடன் இந்தியாவிற்குள் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரம் இதோ.

HMD நிறுவனம் உலக சந்தையில் புதிய எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ததோடு, இந்தியாவில் அதன் விற்பனையை இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பல அட்டகாசமான அம்சங்களை பேக் செய்து, பட்ஜெட் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. HMD ஸ்கைலைன் (HMD Skyline) போனின் சிறப்பம்ச விபரங்கள் மற்றும் விற்பனை விலை விபரங்கள் இதோ.

மாஸ் HMD மொபைலின் சேல் ஆரம்பம்.. பட்ஜெட் விலை.. 108MP கேமரா.. 12GB ரேம

மாஸ் HMD Skyline மொபைலின் சேல் ஆரம்பம்.. பட்ஜெட் விலையில் 108MP கேமரா போன்:

HMD Skyline ஸ்மார்ட்போன் சாதனம் 6.5" இன்ச் அளவு கொண்ட FHD+ ரெசொலூஷன் கொண்ட 144Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் நோக்கியா லூமியா (Nokia Lumia) தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் பின்பக்கம் சதுர வடிவ கேமரா ஐலேண்ட் மாட்யூலை கொண்டுள்ளது.

இந்த HMD Skyline ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விலையில் நேரடியாக 12GB ரேம் அம்சத்தை 256கிபி ஸ்டோரேஜ் உடன் வழங்குகிறது. இதனால், உங்கள் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் அனுபவம் ஸ்மூத்தாகவும் ஃபாஸ்டாகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. இந்த எச்எம்டி மொபைல் (HMD Mobile) ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 processor) உடன் இயங்குகிறது.

இது ஆண்ட்ராய்டு 14 உடன் இயங்குகிறது. இந்த HMD ஸ்கைலைன் (HMD Skyline) ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 108MP கொண்ட மெயின் கேமராவுடன் OIS ஆதரவை பெற்றுள்ளது. இது 8MP அல்ட்ரா வைட் கேமரா உடன் 50MP டெலிபோட்டோ ஸ்னாப்பருடன் இணைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 50MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

எச்எம்டி ஸ்கைலைன் இன்றைய விற்பனை விலை (HMD Skyline Sale Price Today):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 4,600mAh பேட்டரி உடன் 33W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தையும் பட்ஜெட் விலையில் அடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நியான் பிங்க் மற்றும் டிவிஸ்டட் பிளாக் நிறங்களில் வருகிறது. இதன் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 35,999 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17, 2024 ஆம் தேதி முதல் அமேசான், HMD அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. ஆரம்ப கால சிறப்பு சலுகையாக, ரூ. 1500 மதிப்பிலான உடனடி சலுகை ஒன் கார்ட் கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கிறது. இன்னும் சில சலுகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Skyline 12GB RAM 256GB Storage Price Rs 35999 Goes On Sale Today Via Amazon HMD and Retail Stores In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X