வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்.. 50MP செல்பி கேமரா.. 33W சார்ஜிங்.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனங்களின் போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எச்டிஎம் நிறுவனம் விரைவில் HMD Sage எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது நோக்கியா லூமியா போனின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய எச்எம்டி Sage ஸ்மார்ட்போன். ஆனால் மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த எச்எம்டி Sage ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எச்எம்டி Sage அம்சங்கள்: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த எச்எம்டி Sage ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான யுனிசாக் டி760 (Unisoc's T760 processor) பிராசஸர் உடன் எச்எம்டி Sage ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய எச்எம்டி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் எச்எம்டி Sage ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 50எம்பி கேமரா வசதி இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் எச்எம்டி Sage போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000mAh பேட்டரி உடன் இந்த எச்எம்டி Sage போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்எம்டி Sage ஸ்மார்ட்போனில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








