Home
Mobile

ஆஹா.. ஓஹோ.. இது தான் HMD ரிட்ஜ் ப்ரோ.. பட்ஜெட் 5G Mobile-னா இதான்யா.. Nokia ரசிகர்கள் வெயிட்டிங்..

எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் மிகவும் விரைவில் 5 புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பிட்டு கூறும் வகையில், பட்ஜெட் விலையில் எச்எம்டி நிறுவனம் ஒரு புதிய ப்ரோ வேரியண்ட் ஸ்மார்ட்போன் (Budget price pro variant smartphone) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் HMD ரிட்ஜ் ப்ரோ (HMD Ridge Pro) என்ற பெயருடன் அட்டகாசமான அம்சங்களை பேக் செய்யுமென்று லீக் (Leak) தகவல்கள் குறிப்பிடுகின்றன. நோக்கியா ரசிகர்கள் குறைந்த விலையில் பெஸ்டாக ஒரு 5ஜி மொபைலை (5G Mobile) எதிர்பார்த்து காத்திருந்தனர்.

நோக்கியா ரசிகர்களின் நியாயமான எதிர்பார்ப்பை இந்த புதிய HMD ரிட்ஜ் ப்ரோ (HMD Ridge Pro) என்ற சாதனம் பூர்த்திசெய்வது போல தெரிகிறது. ஏனெனில் இதில் உள்ள அம்சங்களின் தகவலை பார்க்கையில், உண்மையில் நாம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் எச்எம்டி நிறுவனம் தரம் குறையாமல், குறைந்த பட்ஜெட் விலையில் வழங்கி அசத்தியுள்ளது. குறிப்பாக இந்த போனை பார்ப்பதற்கு சற்று பிரீமியம் ஆக காட்சியளிக்கிறது.

ஆஹா.. ஓஹோ.. இது தான் HMD ரிட்ஜ் ப்ரோ.. பட்ஜெட் 5G Mobile-னா இதான்யா..

HMD ரிட்ஜ் ப்ரோ (HMD Ridge Pro):

சமீபத்தில் வெளியான லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி, புதிதாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் புதிய HMD ரிட்ஜ் ப்ரோ (HMD Ridge Pro) ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் லீக் செய்யப்பட்டுள்ளன. லீக் தகவலில் HMD ரிட்ஜ் ப்ரோ (HMD Ridge Pro) ஸ்மார்ட்போன் என்ன அம்சங்களை பேக் செய்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

HMD ரிட்ஜ் ப்ரோ (HMD Ridge Pro) ஸ்மார்ட்போன் சாதனம் 6.64" இன்ச் கொண்ட எஃப்எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (FHD+ IPS LCD display) பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 800 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (800 nits peak brightness) ஆதரவையும் வழங்குமென்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC chipset) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் (RAM) உடன் முறையே 128ஜிபி ஸ்டோரேஜ் (Storage) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் போன்ற ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூடுதல் மெமரி அம்சத்திற்காக மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு அம்சமும் இடப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

HMD ரிட்ஜ் ப்ரோ 5ஜி மொபைல் விலை (HMD Ridge Pro 5G Mobile Price):

இந்த புதிய HMD ரிட்ஜ் ப்ரோ 5ஜி மொபைல் (HMD Ridge Pro 5G Mobile) சாதனம் 50MP மெயின் கேமரா, 5MP அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் 2MP கொண்ட டெப்த் சென்சார் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை இந்த சாதனம் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், இது 50MP செல்பி ஸ்னாப்பரை பெரும். இதன் பேட்டரி 5000mAh உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

HMD ரிட்ஜ் ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் மோச்சா (Mocha), ஸ்னோவ் (Snow), மற்றும் கிளாஸியர் க்ரீன் (Glacier Green) போன்ற நிறங்களுடன் ரூ. 15,000 முதல் ரூ. 18,000 விலைக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Ridge Pro 5G Mobile 6.64 Inch LCD Display 50MP Triple Camera 5000mAh Battery Under Budget Price Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X