தட்டிவிட்டு சிதறவிடும் HMD போன்கள்.. சீன போன்களை ஓடவிடப்போகும் மலிவு விலை 5G Mobile.. என்ன மாடல்? என்ன அம்சம்?
எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம், விரைவில் மிகவும் மலிவான விலையில் ஒரு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் (Low Price 5G Smartphone) சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு எதிர்பார்க்கப்பட்ட புது HMD மொபைல் சாதனங்களுடன் மற்றொரு புதிய மலிவு விலை மாடலை நிறுவனம் சஸ்பென்சாக உருவாக்கி வருவது போல் தெரிகிறது. இந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை HMD நிறுவனம் பழைய நோக்கியா லூமியா (Nokia Lumia) சாயலில் மினி சைஸில் உருவாக்கி வருவதாக வதந்திகள் தெரிவிக்கின்றன.
HMD நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) மொபைல் சாதனத்தை இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா சாயலை நினைவூட்டும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று லீக் தகவல்கள் கடந்த சில மாதமாக குறிப்பிட்டு வருகின்றன. இத்துடன் HMD பல்ஸ் ட்ரையோ (HMD Pulse Trio) சாதனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்எம்டி ரிட்ஜ் (HMD Ridge) மற்றும் எச்எம்டி வேலே (HMD Waylay) புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்:
அதேபோல், இந்த வரிசையில் HMD அட்லஸ் (HMD Atlas) என்ற மற்றொரு மாடலுடன் 5 அல்லது அதற்கு மேற்பட்ட புதிய HMD ஆண்ட்ராய்டு போன்களை நிறுவனம் ஒன்றின் பின் ஒன்றாக அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில், எச்எம்டி ரிட்ஜ் (HMD Ridge) மற்றும் எச்எம்டி வேலே (Waylay) போன்ற சாதனங்களும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் பட்ஜெட் 5G விருப்பமாக வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது @smashx_60 வழியாக வெளியாக லீக் படி, HMD நிறுவனம் மற்றொரு Lumia போன்ற சாதனத்தின் போட்டோவை பகிர்ந்துள்ளது. இது HMD ஸ்கைலைன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காரணம், 108MP கேமராவை கொண்டிருக்கவில்லை.
மாறாக, இந்த சாதனத்தின் பின்புறம் "50MP OIS கேமரா" என்ற வார்த்தைகளை தெளிவாக காண்பிக்கிறது. இது 8GB ரேம் மற்றும் 128/256GB ஸ்டோரேஜ் உடன், யுனிஸாக் T760 சிப்செட் (Unisoc T760 SoC) மூலம் இயங்கும் சாதனமாக தெரிகிறது. இது பிளாட் 6.67" இன்ச் OLED FHD+ டிஸ்பிளேவை 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் கொண்டிருக்கும். 50MP + 8MP + 2MP கேமராவை கொண்டிருக்கும்.
சீன 5ஜி போன்களை ஓடவிடபோகும் HMD புது போன்கள்:
இது 33W சார்ஜிங்குடன் 4,900mAh பேட்டரியை பேக் செய்யும் மாடலாக இருக்குமென்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் பெயர் விபரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இது €300 யூரோ விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, HMD ஸ்கைலைன் €460 யூரோ விலை வரம்பில் வெளிவரவிருக்கிறது. இதுனுடன் ஒப்பிடுகையில், இந்த பெயர் அறியப்படாதா HMD ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மென்ட் (HMD Budget Smartphone) சாதனமாக தெரிகிறது.
இத்துடன் மற்றொரு மலிவு விலை சாதனமும் தற்போது லீக் தகவலில் தோன்ற துவங்கியுள்ளது. இது 6.56" இன்ச் கொண்ட IPS LCD FHD+ டிஸ்பிளேவை, 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வழங்கவுள்ளது. இது யுனிஸாக் T606 சிப்செட் (Unisoc T606 Chipset) உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50+2MP பின்பக்க மற்றும் 50MP முன்பக்க கேமராக்கள் வர வாய்ப்புள்ளது.
இந்த மலிவு விலை எச்எம்டி ஸ்மார்ட்போன் சாதனம் 5ஜி இணக்கத்துடன் 20W சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியை பேக் செய்யுமென்று கூறப்படுகிறது. இதன் விலை தோராயமாக €200 யூரோஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நுழைந்தால், மலிவு விலை பிரிவில் உள்ள சீன 5ஜி போன்களை ஓடவிடும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


Click it and Unblock the Notifications








