இனி நோக்கியா போன் எதுக்கு? 50MP செல்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?
நோக்கியா போன்களை உருவாக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் எச்எம்டி பல்ஸ் ப்ரோ (HMD Pulse Pro) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸமார்ட்போன் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, 128ஜிபி மெமரி, 50எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ (HMD Pulse Pro) ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான எச்எம்டி பல்ஸ் ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எச்எம்டி பல்ஸ் ப்ரோ அம்சங்கள் (HMD Pulse Pro specifications): 6.59-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 1480×720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் எச்எம்டி பல்ஸ் ப்ரோ மாடல் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 SoC) வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
IP52 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) கொண்டுள்ளது புதிய எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும்
இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்;ட்போன். மேலும் எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,885 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய போன்.
குறிப்பாக இனிமேல் நோக்கியா பெயரில் போன்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இல்லை. அதாவது எச்எம்டி பெயரில் தான் இனி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
photo courtesy: ONLEAKS, 91MOBILE, mysmartprice


Click it and Unblock the Notifications