Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?

எச்எம்டி நிறுவனம் இந்தியாவில் எச்எம்டி பல்ஸ் 2 (HMD Pulse 2) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி பல்ஸ் 2 அம்சங்கள் ( HMD Pulse 2 specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த புதிய எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மார்க்கெட்டே அதிர போகுது.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

தரமான யுனிசாக் டி7250 எஸ்ஒசி (Unisoc T7250 SoC) சிப்செட் உடன் இந்த புதிய எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன். மேலும் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த எச்எம்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

5000mAh பேட்டரி உடன் இந்த எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் எச்எம்டி பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Photo Credit: HMD

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Pulse 2 specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X