Home
Mobile

iPhone 17-க்கு அடுத்த காப்பி.. பட்ஜெட்ல ரெடியாகும் புது HMD போன். OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்!

எச்எம்டி (HMD) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலான எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ (HMD Pulse 2 Pro) ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் கேமரா டிசைன் விவரங்கள் கசிந்துள்ளன. ஐபோன் 17 மாடலை போல கேமரா டிசைன் கொண்ட மாடலாக இருக்கப்போவது தெரிகிறது. அதோடு அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதும், பீச்சர்களை பார்த்தாலே தெரிய வருகிறது. இந்த எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அடுத்த மாடலாக இந்த எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ வெளியாக இருக்கிறது. இதன் அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது. ஆனால், இப்போது முக்கிய பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களும் கசிந்து, விரைவில் வெளியாகும் என்பதை உறுதி செய்துவிட்டன. HMD_MEME'S மூலம் பீச்சர்கள் கசிந்துள்ளன.

iPhone 17-க்கு அடுத்த காப்பி.. பட்ஜெட்ல ரெடியாகும் புது HMD போன்!

எச்எம்படி பல்ஸ் 2 ப்ரோ அம்சங்கள் (HMD Pulse 2 Pro Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்க இருக்கிறது.

ஆனால், கேமரா பம்ப் ஐபோன் 17 மாடலை போலவே கிடைக்க இருப்பது கசிந்துள்ள டிசைனில் பார்க்க முடிகிறது. இந்த எச்எம்படி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. இதுவொரு பட்ஜெட் மாடலாக இருக்கும் என்பதை சிப்செட் வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் யுனிசோக் சிப்செட் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, ஆக்டா கோர் யுனிசோக் டி615 எஸ்ஓசி (Octa Core Unisoc T615 SoC) சிப்செட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த எச்எம்படி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மாப்ட்போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட இருக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் வர இருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), 2 மைக்குகள் (Mics) மற்றும் கஸ்டம் பட்டன் (Custom Button) பாடி கிடைக்க இருக்கிறது. கிளாசியர் கிரீன் (Glacier Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ட்வைலைட் பர்பிள் (Twilight Purple) கலர்கள் இருக்கின்றன.

இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. ஆனால், விலை விவரங்கள் கசியவில்லை. இருப்பினும், ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இந்த எச்எம்படி பல்ஸ் 2 ப்ரோ மாடலை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இதில் யுனிசோக் டி615 எஸ்ஓசி சிப்செட் கிடைக்கிது. இது அடிமட்ட பட்ஜெட் மாடல்களில் மட்டுமே கிடைக்கும். முந்தைய மாடலிலும் யுனிசோக் சிப்செட் கிடைத்தது.

அதாவது, முன்னதாக வெளியான எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் யுனிசோக் டி606 (Unisoc T606) சிப்செட் கிடைத்தது. அதேபோல 5000mAh பேட்டரி மற்றும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, பல்ஸ் 2 ப்ரோ மாடலையும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Pulse 2 Pro Key Specifications iPhone 17 Like Camera Design Leaked Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X