திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. NOKIA LUMA போன் அறிமுகம்.. 5000mAh பேட்டரி, 50MP கேமரா, 3.5மிமீ ஜாக்!
நோக்கியா (NOKIA) நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் கொஞ்சம் பிரபலம் அடைந்த நோக்கியா மாடல்கள் என்றால் அது நோக்கியா லூமியா (NOKIA Lumia) ஸ்மார்ட்போன்கள் தான். தெரிந்தோ தெரியாமலோ - நோக்கியா பிராண்ட்டட் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள - எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது கிட்டத்தட்ட அதே மாதிரியான பிராண்டிங்கின் பெயரின் கீழ் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அது எச்எம்டி லுமா 4ஜி (HMD Luma 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இது யுனிசாக் டி615 சிப்செட் (Unisoc T615) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஒரு 12என்எம் ப்ராசஸர் ஆகும். அதாவது இது அதிக கேமிங் அல்லது பணிச்சுமைகள் மிக்க தேவைகளுக்காக வடிவமைக்கப்படவில்லை. மேலும் வெளிப்டையாகவே எச்எம்டி நிறுவனம் இதை "அந்த வழியில்" நிலைநிறுத்தவும் இல்லை.

மாறாக எச்எம்டி லுமா 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது தெளிவாக அன்றாட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது: அதாவது மெசேஜ் அனுப்புதல், சமூக ஊடகங்களை பயன்படுத்துதல், ஸ்ட்ரீமிங் செய்வது, நேவிகேஷன் செய்வது, மேலும் சில லேசான மல்டி டாஸ்கிங்கையும் செய்யும்.
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இது 128ஜிபி அல்லது 256ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறதுடன். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67 இஞ்ச அளவிலான HD+ LCD பேனலை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கிறது. இது சில முந்தைய பட்ஜெட் மாடல்களில் காணப்பட்ட 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்,
இது முன்பை விட ஸ்க்ரோலிங் மற்றும் பொதுவான நேவிகேஷனின் போது சீராக உணர வைக்க வேண்டும். இந்த டிஸ்பிளேவின் பீக் ப்ரைட்னஸ் ஆனது சுமார் 500 நிட்ஸ்களாக மதிப்பிடப்படுகிறது, இது பெரும்பாலான சூழ்நிலைகளில் - வெளிப்புற தெரிவுநிலையை நியாயமான முறையில் கையாள போதுமான ப்ரைட்னஸ் தான்!
கேமராக்களை பொறுத்தவரை எச்எம்டி லுமா 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பேக் பேனலில் 50எம்பி ப்ரைமரி சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை போலவே, நிஜ உலக செயல்திறனுக்காக இந்த ஸ்மார்ட்போன் மெகாபிக்சல் எண்ணிக்கையை விட இமேஜ் ப்ராசஸிங்கை அதிகம் சார்ந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நல்ல வெளிச்சத்தில் நல்ல விவரங்களை வழங்கும்.
பேட்டரியை பொறுத்தவரை இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இதுவொரு பெரிய பேட்டரி அல்ல என்றாலும் ஒரு சாதாரண சிப்செட் மற்றும் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ள ஒரு 4ஜி ஸ்மார்ட்போனுக்கு இது நம்பகமான நிலைத்தன்மையை வழங்க வேண்டும். யுஎஸ்பி-சி 2.0 உடன் இதன் சார்ஜிங் ஸ்பீட் 18W ஆக வரையறுக்கப்பட்டுள்ளது - குறிப்பாக 2026 தரநிலைகளின்படி இது வேகமான சார்ஜிங் அல்ல. ஆனால் பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் என்பதால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது.
சில சிறிய ஆட்-ஆன்கள் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை விட தனித்து நிற்கின்றன என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. இது ஒரு சிறிய விவரமாக தோன்றலாம், ஆனால் இது வாங்குபவர்களை விலையுயர்ந்த ப்ளூடூத் இயர்போன்களை வாங்க வேண்டிய அவசியத்திலிருந்து காப்பாற்றுகிறது - இந்த விலையில் இது முக்கியமான ஒரு அம்சமாகும்
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் சிம் 4G கனெக்டிவிட்டி ஆதரவும் உள்ளது. இவை எதுவும் "பேப்பரில்" பளபளப்பாக இல்லை என்றாலும் "ஒன்றாக சேர்ந்து" ஸ்மார்ட்போனின் "எளிமையாக வைத்திருங்கள்" என்கிற நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 15 அவுட் ஆப் பாக்ஸ் உடன் வருகிறது
எச்எம்டி லுமா 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் மற்றும் ப்ளூ ஆகிய 2 கலர்களில் வருகிறது, சுமார் 198 கிராம் எடையும் 8.65 மிமீ தடிமனையும் கொண்டுள்ளது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன் நைஜீரியா மற்றும் கானாவில் உள்ள எச்எம்டி நிறுவனத்தின் பிராந்திய வலைத்தளங்களில் "விரைவில் வருகிறது" என்கிற குறிச்சொல்லுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இது நிச்சயம் பட்ஜெட் விலை மாடலாகத்தான் இருக்கும். மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








