Home
Mobile

கேப்பு விட்டா தானே ஆப்பு அடிப்பீங்க.. அதுக்குள்ள 6000mAh பேட்டரி உடன் இன்னொரு புது HMD போன்.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி உடன் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பரபரப்பாக இந்திய சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கும் வேளையில், நோக்கியா நிறுவனத்தின் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் கொண்டுள்ள எச்எம்டி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன எச்எம்டி லுமா 2 (HMD Luma 2) குறித்த விவரங்களும், படங்களும் (Renders) இணையத்தில் வெளியாகி உள்ளன.

நம்பகமான டிப்ஸ்டர் smashx_60 வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, எச்எம்டி லுமா 2 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) உடன் கூடிய பெரிய 6.75-இன்ச் HD+ IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இதன் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவும், பின்புறத்தில் 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான கூடுதல் லென்ஸ் ஒன்றும் இடம்பெற்று இருக்கும்.

அதுக்குள்ள 6000mAh பேட்டரி உடன் இன்னொரு புது HMD போன்.. எந்த மாடல்?

சிப்செட்டை பொறுத்தவரை எச்எம்டி லுமா 2 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி280 (Unisoc T7280) சிப்செட் (இது அடிப்படையில் டி620-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்) கொண்டு இயங்கும். இது இரண்டு பெர்பார்மென்ஸ் கோர்கள் (performance cores) மற்றும் ஆறு எஃபிசியன்சி கோர்களை (efficiency cores) கொண்ட ஆக்டா-கோர் (octa-core) சிப் ஆகும்.

இந்த சிப்செட் 4ஜிபி ரேம் (இதை விர்ச்சுவல் ரேம் வழியாக இன்னும் அதிகரிக்கும் ஆதரவு கிடைக்கலாம்) மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். மேலும் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு மூலம் எச்எம்டி லுமா 2 ஸ்மார்ட்போனின் மெமரியை மேலும் விரிவாக்கும் ஆதரவும் கிடைக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை, இது 18W வயர்டு சார்ஜிங் வசதியுடன் கூடிய பெரிய 6000mAh பேட்டரி இடம்பெறலாம் என்றும், இதன் பேட்டரி லைஃப் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் சிறந்த ஒலி அனுபவத்திற்கான Nokia-வின் OZO ஆடியோ தொழில்நுட்பம் ஆகியவைகளும் இடம்பெறலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் Ice Blue, Light Sand மற்றும் Midnight Lake ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம்.

இந்தியாவில் முன்னதாக அறிமுகமான எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ல் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 265ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் எச்டி பிளஸ் (720×1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது 2.3GHz வரை கிளாக் செய்யப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் பிராசஸரில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாண்டர்டாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ (AI) ஆதரவு கொண்ட ரியர் கேமரா யூனிட் உள்ளது.

அதில் எல்இடி (LED) ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, இந்த ஸ்மார்ட்போனில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. எச்எம்டி-யின் இந்த புதிய ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனில், ப்ளூடூத் 5.0, வைஃபை 5 மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளன. மேலும், இதில் ஆக்சிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. கூடவே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது (இதற்கான சார்ஜர் பாக்ஸில் சேர்க்கப்பட்டு உ ள்ளது). கடைசியாக, அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 168×77.7×8.6 மிமீ உள்ளது மற்றும் எடையில் 210 கிராம் உள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Luma 2 With 6000mAh Battery Tipped to Launch Soon What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X