இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
நோக்கியா போன்களை தயாரிக்கும் எச்எம்டி (HMD) நிறுவனம் தற்போது Heineken எனும் நிறுவனத்துடன் இணைந்து புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே அறிமுகமான நோக்கியா பிளிப் போனை போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த புதிய போன் ஆனது போரிங் போன் என்று அழைக்கப்படுகிறது.
Heineken x Bodega போரிங் போன் 2.8-இன்ச் டிஸ்பிளே, 1450எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போரிங் போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Heineken x Bodega போரிங் போன் அம்சங்கள் (Heineken x Bodega Boring Phone specifications): 2.8-இன்ச் QVGA மெயின் டிஸ்பிளே வசதியுடன் இந்த போரிங் போன் வெளிவந்துள்ளது. இதுதவிர 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது. குறிப்பாக இரண்டு டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
டிரான்ஸ்பெரன்ட் ஹாலோகிராபிக் வசதியைக் கொண்டுள்ளது இந்த பிளிப் போரிங் போன். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி மற்றும் Heineken நிறுவனங்கள். எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 0.3எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போரிங் போன். எனவே யுபிஐ ஸ்கேன் செய்வது போன்ற விஷயங்களுக்கு இந்த கேமரா பயன்படும் என்று கூறப்படுகிறது.

2ஜி, 3ஜி, 4ஜி கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போரிங் பிளிப் போன் வெளிவந்துள்ளது. மேலும் 128எம்பி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போரிங் போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
புளூடூத் 4.2 (Bluetooth 4.2), 3.5மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது புதிய Heineken x Bodega போரிங் போன். மேலும் ஸ்னேக் கேம் (Snake Game), எப்எம் ரேடியோ (FM radio) போன்ற வசதிகளுடன் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1450எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி (Removable Battery) வசதியுடன் போரிங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த புதிய போனின் எடை 123 கிராம் ஆகும்.
குறிப்பாக உலகசந்தையில் போரிங் போனின் (Boring Phone)) 5,000 யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வர உள்ளது. அதேபோல் இந்த போனின் விலைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை எச்எம்டி நிறுவனம். மேலும் இந்த புதிய போரிங் போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக எச்எம்டி நிறுவனம் அவ்வப்போது நோக்கியா (Nokia) போன்களை அறிமுகம் செய்துவந்தாலும், அதிகமாக அறிமுகம் செய்வது இல்லை. அதிலும் நோக்கியா பீச்சர் போன்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது எச்எடிம் குளோபல் நிறுவனம்.
அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் எச்எம்டி எனும் பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo courtesy: HMD,fonearena


Click it and Unblock the Notifications








