Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. USB-C போர்ட்.. 1450mAh பேட்டரி.. அறிமுகமானது இரண்டு Nokia 4ஜி போன்கள்.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 105 4ஜி 2025 (Nokia 105 4G 2025) எடிஷன் மற்றும் நோக்கியா 110 4ஜி 2025 (Nokia 110 4G 2025) எடிஷன் மாடல்களை ஐரோப்பாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களில் சில முக்கிய மாற்றங்களைச் செய்து வெளியிட்டுள்ளது எச்எம்டி நிறுவனம். இந்த போன்கள் குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 105 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி மாடல்களின் பின்புற பேனலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பின்பு கேமரா அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. அதேபோல் இந்த இரண்டு போன்களில் மைக்ரோ-யூஎஸ்பிக்கு பதிலாக யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போார்ட் (USB-C charging port)கொடுக்கப்பட்டுள்ளது. இது முக்கியமான மாற்றம் ஆகும்.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது இரண்டு Nokia 4ஜி போன்கள்..

நோக்கியா 105 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி அம்சங்கள்: 1.77-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த இரண்டு நோக்கியா போன்களும் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120×160 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் இந்த இரண்டு போன்களும் சக்திவாய்ந்த யுனிசாக் டி107 பிராசஸர் (Unisoc T107 processor) வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் நோக்கியா 110 4ஜி போன் ஆனது QVGA கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் கேமரா உடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

1450mAh பேட்டரி ஆதரவுடன் நோக்கியா 105 4ஜி 2025 எடிஷன் மற்றும் நோக்கியா 110 4ஜி 2025 எடிஷன் வெளிவந்துள்ளன. எனவே இந்த போன்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன்கள் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பிளாஷ் லைட் ஆதரவும் இதில் உள்ளது.

இந்த இரண்டு நோக்கியா போன்களும் 4ஜி வோல்ட்இ ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த போன்களின் உதவியுடன் எச்டி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும் எப்எம் ரேடியோ,நோக்கியாவின் கிளாசிக் ஆன கேம் வசதிகள் இந்த போன்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த நோக்கியா 105 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி போன்களில் உள்ளன.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது இரண்டு Nokia 4ஜி போன்கள்..

நோக்கியா 105 4ஜி போன் ஆனது கிளாசிக் பிளாக் (classic black) நிறத்தில் வாங்க முடியும். பின்பு நோக்கியா 110 4ஜி போன் ஆனது வைபரென்ட் ப்ளூ (Vibrant Blue) மற்றும் பர்பிள் (purple)நிறங்களில் வாங்க கிடைக்கும். தற்போது வரை இந்த இரண்டு நோக்கியா போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை எச்எம்டி குளோபல் நிறுவனம். விரைவில் இந்த போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை அறிவிக்கப்படும்.

அதேபோல் எச்எம்டி நிறுவனம் சமீபத்தில் HMD Arc எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.52-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா, யுனிசாக் 9863ஏ சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த HMD Arc போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD launched Nokia 105, Nokia 110 feature phones: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X