Home
Mobile

வாங்க செல்ல குட்டீஸ்.. 100, 101 மற்றும் 102.. ரூ.1000 பட்ஜெட்டில் 3 புது NOKIA HMD போன்கள்!

நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது - சமீபத்தில் தான் அறிமுகம் செய்த 3 புதிய சூப்பர்-பேஸிக் 4ஜி போன்களுக்கு "நேர்மாறாக" மேலும் 2 புதிய பேஸிக் போன்களை அறிமுகம் செய்துள்ளது

எச்எம்டி நிறுவனமானது கடந்த 2025 செப்டம்பரில் 4ஜி ஆதரவுடன் கூடிய எச்எம்டி 102 4ஜி (HMD 102 4G) மற்றும் எச்எம்டி 101 4ஜி (HMD 101 4G) மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. இதற்கிடையில் தற்போது அதே 2 போன்களின் 4ஜி-லெஸ் மாடல்கள் (அதாவது 4ஜி ஆதரவு இல்லாத மாடல்கள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

100, 101 மற்றும் 102.. ரூ.1000 பட்ஜெட்டில் 3 புது NOKIA HMD போன்கள்!

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ஜீன்-ஃபிராங்கோயிஸ் பாரில், எச்எம்டி நிறுவனம் ஆனது மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதாக லிங்க்ட்இனில் பதிவிட்டுள்ளார் - அவைகள் எச்எம்டி 100 (HMD 100), எச்எம்டி 101 (HMD 101) மற்றும் எச்எம்டி 102 (HMD 102) மாடல்கள் ஆகும்.

இந்த மூன்று போன்களில் ஒப்பீட்டளவில் "மிகவும் திறமையான" எச்எம்டி 102 மாடல் ஆனது எம்பி3 பிளேயர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட கேமராவை கொண்டுள்ளது. எச்எம்டி 101 மாடலில் கேமரா இல்லை. அதே நேரத்தில் எச்எம்டி 100 மாடலில் எம்பி3 பிளேயர் கூட இல்லை - இதன் பொருள் எச்எம்டி 100 மாடலில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் இல்லை, ஏனெனில் இதில் இன்டர்னல் ஸ்டோரேஜ் இல்லை என்று அர்த்தம்.

பலரும் 4ஜி-யில் இருந்து 5ஜி-க்கு அப்கிரேட் ஆகிக்கொண்டிருக்கும் போது, 4ஜி இல்லாமல் 3 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது ஏன் என்கிற விளக்கத்தை எச்எம்டி நிறுவனம் சொல்ல வேண்டும். எல்லாவற்றை விட முக்கியமாக இந்த் 3 மாடல்களின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் ரூ.1000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் இருக்கும். ஏனென்றால் 4ஜி மாடலே ரூ.2000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வாங்க கிடைக்கிறது.

2025 செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகமான எச்எம்டி 101 4ஜி மற்றும் எச்எம்டி 102 4ஜி மொபைல் போன்களின் விலை விவரங்கள்: எச்எம்டி 101 4ஜி மொபைல் போன் ஆனது டார்க் ப்ளூ, ரெட் மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது,. இதன் விலை ரூ.1,899 ஆகும்.

மறுகையில் உள்ள எச்எம்டி102 4ஜி மாடல் ஆனது டார்க் ப்ளூ, ரெட் மற்றும் பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2,199 ஆகும். இந்த 2 மாடல்களுமே இந்தியாவில் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள், முக்கிய இகாமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் எச்எம்டி.காம் (HMD.com) வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.

எச்எம்டி 101 4ஜி மற்றும் எச்எம்டி 102 4ஜி முக்கிய அம்சங்கள்:
- 2 இன்ச் (240 x 320 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்) QQVGA டிஸ்பிளே
- யுனிசாக் 8910 FF-S ப்ராசஸர்
- 16எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டுடன் 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி

- எஸ்30பிளஸ் (RTOS)
- ஃபிளாஷ் கொண்ட QVGA கேமரா (எச்எம்டி 102 4ஜி மாடலில் மட்டும்)
- எப்எம் ரேடியோ (வயர்டு/வயர்லெஸ்)
- எம்பி3 பிளேயர்
- கிளவுட் ஆப்ஸ்
- லோக்கல் மொழிகளுக்கான ஆதரவு
- டூயல் பேண்ட் 900/1800MHz (டூயல் சிம்)

- ப்ளூடூத் 5.0
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3.5மிமீ ஆடியோ ஹெட்ஃபோன் ஜாக்
- டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் (ஐபி52 ரேட்டிங்)
- 1000mAh நீக்கக்கூடிய பேட்டரி
- அளவீட்டில் 118.2×50.2×14.3மிமீ
- எடையில் 83.5 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Launched 3 New Feature Phones Without 4G Support HMD 100 HMD 101 HMD 102
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X