வெறும் ரூ.6,300 பட்ஜெட்ல 4000mAh பேட்டரி.. IP52 ரேட்டிங்.. அறிமுகமானது புது HMD போன்.. எந்த மாடல்?
எச்எம்டி (HMD) நிறுவனம் தனது புதிய எச்எம்டி கீ ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இப்போது எச்எம்டி கீ (HMD Key)ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
எச்எம்டி கீ அம்சங்கள் (HMD Key Specifications): 6.52-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280 X 576 பிக்சல்ஸ், 460 நிட்ஸ் பிரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான யுனிசாக் 9832இ சிப்செட்(Unisoc 9832E chipset) சிப்செட் உடன் இந்த எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) உடன் இந்த புதிய எச்எம்டி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
எல்இடி பிளாஸ் ஆதரவைக் கொண்ட 8எம்பி கேமரா உடன் இந்த எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் கேமராக்கள் போர்ட்ரெய்ட், நைட், ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் மற்றும் பனோரமா உள்ளிட்ட பல இமேஜிங் மோட்களை ஆதரிக்கிறது.
4000mAh பேட்டரி உடன் புதிய எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 10W சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் IP52 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (IP52 rating for splash resistance) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, எப்எம், ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், கலிலியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்எம்டி கீ ஸ்மார்ட்போன். மேலும் ஐசி ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் எடை 185.4 கிராம் ஆகும்.
அதேபோல் எச்எம்டி கீ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,300-ஆக உள்ளது. நியூசிலாந்து (New Zealand), ஆஸ்திரேலியா (Australia) யுகே (UK) உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய எச்எம்டி போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








