NOKIA பெயர் காப்பாற்றபட்டது.. வெறும் ரூ.6300-க்கு 6.52-inch டிஸ்பிளே, 4GB ரேம், ஆட்டோஃபோகஸ் கேமரா, 4000mAh!
2025 ஆம் ஆண்டு தொடங்கியதுமே நோக்கியா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வண்ணம், நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம். ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு தரமான 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
பிளாக்ஷிப் பிரிவில் வரும் ஒன்பிளஸ் 13, மிட்ரேன்ஞ் பிரிவில் வரும் ஒன்பிளஸ் 13ஆர், ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட் பிரிவில் வரும் மோட்டோ ஜி05 4ஜி மற்றும் ரெட்மி 14சி 5ஜி உள்ளிட்ட மாடல்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு எச்எம்டி கீ 4ஜி (HMD Key 4G) ஸ்மார்ட்போனின் அறிமுகம் உண்மையில் ஒரு சர்ப்ரைஸ் தான்!

யுனிசாக் 9832இ சிப்செட், ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன், ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான ப்ரைமரி கேமரா, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங், விர்ச்சுவல் ரேம் அம்சம், மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் எச்எம்டி கீ 4ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்ககள்:
எச்எம்டி கீ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 576 x 1280 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.52 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் 9832இ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128ஜிபி வரை நீட்டிக்கலாம் மற்றும் இது 2ஜிபி வரையிலான கூடுதல் விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது
எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் உடன் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 8 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது.
முன் கேமராவை பொறுத்தவரை, இது டிஸ்பிளேவில் மையப்படுத்தப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச்சில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ சென்சார் ஆகும். கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதன் பிரைமரி கேமராவனது போர்ட்ரெய்ட், நைட், ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் மற்றும் பனோரமா உள்ளிட்ட பல இமேஜிங் மோட்களை ஆதரிக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை எச்எம்டி கீ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 10W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் வருகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, எப்எம், ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், கலிலியோ மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகாலை கொண்டுள்ளது
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டட் கட்டமைப்பை கொண்டுள்ளது.கடைசியாக, அளவீடுகளில் இது 166.4 x 76.9 x 8.95 மிமீ உள்ளது மற்றும் 185.4 கிராம் எடையை கொண்டுள்ளது.
எச்எம்டி கீ ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள்: தற்போதைக்கு யுகே, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.6,300 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று உள்ளது.
ஐசி ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எச்எம்டி கீ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட எப்போது மற்ற பிராந்தியங்களில் எப்போது அறிமுகமாகும் என்கிற விவரத்தை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் கூட எப்படியும் இது கூடிய விரைவில் அறிமுகமாகி விடும். ஏனென்றால் எச்எம்டி பிராண்டிங்கின் கீழ் வெளியான பெரும்பாலான மாடல்கள் இந்திய சந்தைக்கும் வந்துள்ளன.


Click it and Unblock the Notifications








