ஆளுக்கு 2 ஆர்டர் போடும் விலை! 4ஜி, 1500mAh பேட்டரி, 2 டிஸ்பிளே, USB-C, ப்ளூடூத் 5-னு HMD Icon Flip 1 அசத்துதே!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது கூடிய விரைவில் எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 (HMD Icon Flip 1) என்கிற ஃபோல்டபிள் ஃபீச்சர் போனை (Foldable Feature Phone) அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2022 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2660 ஃபிளிப் (Nokia 2660 Flip) போனின் "சற்றே மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்" ஆக தெரியும் எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

வடிவமைப்பை பொறுத்தவரை, எக்ஸ் பயனர் @smashx_60 வழியாக கிடைத்த தகவலின்படி, எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 போன் ஆனது கிளாம்ஷெல் போல்டபிள் டிசைனுடன் வரும். இந்த போனின் இடது பக்கவாட்டின் கீழே யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது மற்றும் மேலே 3.5மிமீ ஹெட்ஜாக் உள்ளது. மறுபக்கத்தில், அதாவது வலது பக்கத்தில் ஸ்பீக்கர் கிரில் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன் உள்ளன
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 போன் ஆனது மெஜந்தா மற்றும் ப்ளீன் (அதாவது பச்சை மற்றும் நீலம் ஆகியவற்றின் கலவை) ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த போன் கிளாசிக் கலர் ஆப்ஷன் ஆன "பளபளப்பான பிளாக்" கலரிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 போன் டபுள் டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும். இதில் 1.7 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவுடன் சேர்த்து 2.8-இன்ச் மெயின் எல்சிடி டிஸ்பிளேவும் இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை இதில் 2-மெகாபிக்சல் நிஸ்டாண்டர்ட் ஃபோகஸ் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும்
பேட்டரியை பொறுத்தவரை இதில் 1500mAh நீக்கக்கூடிய பேட்டரி இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைல் போன் 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி127 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது எஸ்30 பிளஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீழ் இயங்கும் மற்றும் கிளவுட் ஆப்ஸை ஆதரிக்கும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை எச்எம்டி ஐகான் ஃபிளிப் 1 போனில் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.0 வெர்ஷன், யூஎஸ்பி டைப்-சி 2.0 மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் இடம்பெறும். விலையை பொறுத்தவரை இது பெரும்பாலும் நோக்கியா 2660 ஃபிளிப் மாடலின் விலைக்கு நெருக்கமாகவே இருக்கும். அதாவது ரூ.4500-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
நினைவூட்டும் வண்ணம் நோக்கியா 2660 ஃபிளிப் போன் ஆனது, கடந்த ஆகஸ்ட் 2022 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இது கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய 3 கலர்களில் வந்தது. பின்னர் ஆகஸ்ட் 2023 இல் புதிய லஷ் கிரீன் மற்றும் பாப் பிங்க் கலர் ஆப்ஷன்களை பெற்றது. தற்போது இந்த போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.4,660 ஆகும்
நோக்கியா 2660 ஃபிளிப் போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 2.8 இன்ச் க்யூவிஜிஏ மெயின் டிஸ்ப்ளே மற்றும் 1.77 இன்ச் க்யூவிஜிஏ கவர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது யுனிசாக் டி107 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் சீரீஸ் 30பிளஸ் ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது. இந்த போனில் 0.3-மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் உள்ளது மற்றும் இது 1450mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








