Home
Mobile

வாங்குனா இந்த HMD போன் வாங்கனும்.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

எச்எம்டி நிறுவனம் அடுத்து எச்எம்டி ஹைபர் (hmd hyper) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் எச்எம்டி ஹைபர் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவர்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி ஹைபர் அம்சங்கள் (hmd hyper specifications): ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) உடன் இந்த எச்எம்டி ஹைபர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வாங்குனா இந்த HMD போன் வாங்கனும்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான எச்எம்டி ஹைபர் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் இந்த எச்எம்டி ஹைபர் போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். மீடியாடெக் சிப்செட் கொண்ட போன்களை விட இதுபோன்ற ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட போன்களுக்கு தற்போது இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகண்டரி கேமரா + 8எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த எச்எம்டி ஹைபர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4K வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. எனவே நல்ல கேமரா போனை எதிர்பார்க்கும் பயனர்கள் இதைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் எச்எம்டி ஹைபர் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

4700mAh பேடடரி உடன் எச்எம்டி ஹைபர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, வைஃபை 5, புளூடூத் வி5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் எச்எம்டி ஹைபர் போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு ரூ.20,000-க்கு கீழ் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source

Best Mobiles in India

English summary
HMD Hyper specifications leaked online:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X