Home
Mobile

அடுத்த HMD போன் ரெடி.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

எச்எம்டி (HMD) நிறுவனம் விரைவில் எச்எம்டி கிராண்ட் (HMD Grand) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் இந்த எச்எம்டி கிராண்ட் போனின் முக்கிய விவரக்குறிப்புள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

டூயல் ரியர் கேமரா உடன் எச்எம்டி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் இந்த எச்எம்டி வெளிவரும். குறிப்பாக கிரே நிறத்தில் இந்த போன் வெளிவரும். அதுவும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அடுத்த HMD போன் ரெடி.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

எச்எம்டி கிராண்ட் அம்சங்கள் (HMD Grand specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் எச்எம்டி கிராண்ட் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எச்எம்டி கிராண்ட் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென் 2 (Qualcomm's Snapdragon 6s 4G Gen 2) சிப்செட் உடன் இந்த எச்எம்டி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதியுடன் எச்எம்டி கிராண்ட் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் டூயல் ஸ்பீக்கர்கள் (dual speakers) உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் எச்எம்டி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அடுத்த HMD போன் ரெடி.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி உடன் எச்எம்டி கிராண்ட் ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் இந்தியாவில் சற்று குறைவான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Grand images and key specifications leaked online: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X