Subscribe to Gizbot

அட்டகாசம் போங்க.! நோக்கியா 3310 மொபைலை தொடர்ந்து நோக்கியா ஆஷா.!

Written By:

நோக்கியா வாசிகளே - உங்களின் காத்திருப்பு வீண்போகவில்லை. இந்திய மொபைல் சந்தையை ஆட்சி செய்த நோக்கியாவின் பொன்னான கிளாசிக் காலம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மொபைல் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்ட நோக்கியா நிறுவனம் எச்எம்டி க்ளோபல் (நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள) நிறுவனத்தின் துணைகொண்டு அட்டகாசமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை களமிறக்கி சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது.

அட்டகாசம் போங்க.! நோக்கியா 3310 மொபைலை தொடர்ந்து நோக்கியா ஆஷா.!

அதனை தொடர்ந்து நோக்கியாவின் கிளாசிக் மொபைலான 3310-வின் 3ஜி பதிப்பு வெளியானது. தற்போது அதன் 4ஜி பதிப்பு சார்ந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலைப்பாட்டில் மேலுமொரு கிளாசிக் நோக்கியா மொபைலின் வருகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அது நோக்கியா ஆஷா ஸ்மார்ட்போன்கள் பற்றியது. நோக்கியாவின் மிகவும் மலிவுவிலை மொபைலான 'ஆஷா' ஸ்மார்ட் பீச்சர் தொலைபேசிகளை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான நோக்கியா ஆஷா பீச்சர் மொபைல் கருவிகளை ஸ்மார்ட்போன் ஆக வெளியிட எச்எம்டி க்ளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதக தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆஷா பிராண்ட்

ஆஷா பிராண்ட்

நோக்கியாவிற்கு சொந்தமான பிராண்ட் ஆக வெளியான ஆஷா, உரிமம் மற்றும் கையகப்படுத்துதலின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அதே போல தற்போது நோக்கியா கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு ஆஷா பிராண்ட் மாற்றப்பட்டுள்ளது போல தெரிகிறது.

ஒரு புதிய முத்திரையைச் சேர்த்துள்ளது

ஒரு புதிய முத்திரையைச் சேர்த்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐபி அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட அறிவுசார் சொத்துக்களுக்கு பின்னிஷ் நிறுவனமான நோக்கியா ஒரு புதிய முத்திரையைச் சேர்த்துள்ளது என்ற தகவலை லவ்நோக்கியா.நெட் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. இந்த இடத்தில் ஆஷா வணிகச்சின்னமானது முதன் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐபி அலுவலகத்தில் கடந்த நவம்பர் 2011-ல் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையின் படி

அறிக்கையின் படி

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐபி அலுவகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்கல் அறிக்கையின் படி "ஆஷா என்கிற வர்த்தக சின்னமானது மொபைல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் மென்பொருளாகும் மற்றும் மொபைல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் கணினி மென்பொருளுக்கான கம்பியில்லா தகவல்தொடர்பு சேவைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைவெளியை இணைப்பதில் கவனம்

இடைவெளியை இணைப்பதில் கவனம்

இந்த தாக்கலில் இருந்து ஆஷா போன்களை மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. நோக்கியாவின் ஆஷா வரிசையின்கீழ் வெளியான ஸ்மார்ட் பீச்சர் போன்கள் ஆனது பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையிலான இடைவெளியை இணைப்பதில் கவனம் செலுத்தியது.

தயக்கம் காட்டவில்லை

தயக்கம் காட்டவில்லை

ஸ்மார்ட்போன்களின் வருகை அதிகரித்த பின்னும்கூட, நோக்கியா நுகர்வோர்கள் இந்த நுழைவு நிலை நோக்கியா லுமியா ஸ்மாபோன்களைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டவில்லை. அதையெல்லாம் மனதிற்கொண்டு ஆஷா 4ஜி போன்கள் வெளியாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆஷா 4ஜி ஸ்மார்ட் போன்

ஆஷா 4ஜி ஸ்மார்ட் போன்

இன்னும் சொல்லப்போனால், நோக்கியாவின் இந்த நடவடிக்கைக்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன்கள் கூட ஒரு மாபெரும் தூண்டலாக அமைந்திருக்கலாம். யாருக்கு தெரியும்.? எச்எம்டி க்ளோபல் நிறுவனம் தற்போது அடிப்படை நோக்கியா அம்சங்களை உள்ளடக்கிய நோக்கியா பீச்சர் 3310 3ஜி கருவியை விற்பனை செய்து வருகிறது. அதன் 4ஜி மாறுபாடே இன்னும் வெளிவராத நிலைப்பாட்டில் ஆஷா 4ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றி வெளியாகியுள்ள தகவல் நோக்கியா பிரியர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நோக்கியா 1

நோக்கியா 1

இது வதந்திகள் தான் என்றாலும் கூட, மிக விரைவில் இது சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல் கசியமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 1-ஐ அறிமுகப்படுத்துமென்றும் வதந்திக்கப்படுகிறது.

கூகுள் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு

கூகுள் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு

நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆனது அடிப்படை அம்சங்கள் கொண்டு கூகுள் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. மேலும்பல நோக்கியா பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தொடர்ச்சியான அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள். உடன் உங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எங்களுடன் பகிருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
HMD Global trademarks the Asha brand, new smartphones incoming? Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot