Home
Mobile

இப்பவே புது போன் வாங்காதீங்க: பட்ஜெட் விலையில் வருகிறது புதிய 5ஜி Nokia போன்! ரெடியா இருங்க.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் Sanmeet Kochhar தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நோக்கியா 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது விரைவில் நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட் விலையில் வருகிறது புதிய 5ஜி Nokia போன்! ரெடியா இருங்க.!

இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போத இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே எப்படி?

நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

பட்ஜெட் விலையில் வருகிறது புதிய 5ஜி Nokia போன்! ரெடியா இருங்க.!

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். குறிப்பாக மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

பட்ஜெட் விலையில் வருகிறது புதிய 5ஜி Nokia போன்! ரெடியா இருங்க.!

அருமையான கேமரா

அதாவது நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

பட்ஜெட் விலையில் வருகிறது புதிய 5ஜி Nokia போன்! ரெடியா இருங்க.!

பட்ஜெட் விலை

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, எனஎப்சி, ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல். அதேபோல் இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த நோக்கியா போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Global to launch Nokia X30 smartphone in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X