வெளியானது நோக்கியா X6-ன் இந்திய விலை நிர்ணயம்.!

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள HMD குளோபல் நிறுவனமானது, அதன் அடுத்தகட்ட அப்கிரேடட் நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

|

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள HMD குளோபல் நிறுவனமானது, அதன் அடுத்தகட்ட அப்கிரேடட் நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வெளியானது நோக்கியா X6-ன் இந்திய விலை நிர்ணயம்.!

இந்த வெளியீடானது வருகிற மே 29 ஆம் தேதி அன்று ரஷ்யாவில் நடக்கிறது, அது சார்ந்த ஊடக அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்பது பற்றிய அதிகாரபூர்வமான வார்த்தைகள் இல்லை. ஆனால், நிறுவனத்திடம் இருந்து துணுக்கு ஒன்று கிடைத்துள்ளது.

#ChargedUp எனும் வார்த்தை.?

#ChargedUp எனும் வார்த்தை.?

அது #ChargedUp எனும் ஒரு ஹேஷ்டேக் மற்றும் நிகழ்ச்சியில் 'பகிர்ந்து கொள்ள சில புதிய விஷயங்கள்' உள்ளன என்கிற நிறுவனத்தின் வார்த்தைகள் ஆகும். # #ChargedUp எனும் வார்த்தை ஸ்மார்ட்போனின் ஒரு பெரிய பேட்டரி அளவை அல்லது வேகமாக சார்ஜ் செய்யும் திறனை வெளிப்படுத்தலாம்.

மே 29 வரை நாம் காத்திருக்க வேண்டும்.!

மே 29 வரை நாம் காத்திருக்க வேண்டும்.!

இருப்பினும், இந்த ஹேஷ்டேக்கின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை HMD க்ளோபல் நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. அதனால் மே 29 வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பிட்ட விளக்கங்கள் மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்பதிலும் உறுதிப்பாடு இல்ல. ஆனால் சில ஊகங்கள் உள்ளன.

மேம்பட்ட பதிப்புகள் என்றால் என்ன.?

மேம்பட்ட பதிப்புகள் என்றால் என்ன.?

இதுவரை வெளியான தகவல்களின் படி, இந்த நிகழ்வில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளுடன் இணைந்து நோக்கியா எக்ஸ் 6 ஸ்மார்ட்போனை உலகளாவிய மாறுபாடு வெளியாகலாம். மேம்பட்ட பதிப்புகள் என்றால் என்ன.? - நோக்கியா 6.1 போன்றே, நிறுவனத்தின் நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களான நோக்கியா 3.1 மற்றும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனான நோக்கியா 5.1 ஆகியவைகள் வெளியாகலாம்.

இருப்பு உறுதியாகிவிட்டது.!

இருப்பு உறுதியாகிவிட்டது.!

அதை மேலும் உறுதி செய்யும் வண்ணம் சமீபத்தில் நோக்கியா 3.1 ஆனது ஒரு யூசர் ஏஜென்ட் புரொபைலில் காணப்பட்டது, மறுகையில் உள்ள நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனின் இருப்பானது, HMD க்ளோபல் நிறுவனத்தின் CPO ஆன Juho Sarvikas மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஆக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இருப்பு உறுதியாகிவிட்டது, ஆனலும் கூட அப்கிரேடட் செய்யப்பட்ட அம்சங்கள் என்னென்ன என்பது பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

மிகவும் சிறப்பாக செயல்படும்.!

மிகவும் சிறப்பாக செயல்படும்.!

அசல் நோக்கியா 3 ஆனது ஒரு மீடியா டெக் செயலி கொண்டு தொடங்கப்பட்டது, அதே செயலியானது இந்த ஆண்டும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது மீடியா டெக் ஹெலியோ P22 SoC உடன் செல்லலாம், இது பல்வேறு AI திறன்களைக் கொண்ட ஒரு நல்ல சிப்செட் ஆகும். மறுகையில் உள்ள நோக்கியா 5.1 ஆனது ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் வரலாம், இது அசல் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 430 SoC -ஐ விட மிகவும் சிறப்பாக செயல்படும்.

நோக்கியா X6-ன் இந்திய விலை நிர்ணயம்.!

நோக்கியா X6-ன் இந்திய விலை நிர்ணயம்.!

பிரதான வெளியீடான நோக்கியா X6 ஆனது, சமீபத்தில் சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் வெளிவந்தது என்பதும், வந்த வேகத்தில் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை, நோக்கியா X6 ஆனது நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றிற்கு இடையிலேயான விலை புள்ளியில், அதாவது ரூ.22,000/- என்பதை சுற்றிய ஒரு விலை நிர்ணயத்தை பெறலாம்.

நோக்கியா X6 அம்சங்கள்.!

நோக்கியா X6 அம்சங்கள்.!

அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா X6 ஆனது 5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம் மற்றும் 2.5 டி கர்வ்டு கிளாஸ் அமைப்பையும் கொண்டுள்ளது. இது சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC சிப்செட் உடனான ஆக்டா-கோர் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கத்துடன் கூடிய, 6 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது.

இரட்டை கேமரா உள்ளதா.?

இரட்டை கேமரா உள்ளதா.?

நோக்கியா எக்ஸ்6 ஆனது எச்டிஆர் மற்றும் பொக்கே மோட் ஆகிய திறன்களை உள்ளடக்கிய 16 எம்பி முதன்மை மற்றும் 5 எம்பி மோனோகிராம் சென்சார் என்கிற இரட்டை கேமரா கட்டமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எப் / 2.0 துளை உடனான ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொத்தீ அம்சம் இருக்குமா.?

பொத்தீ அம்சம் இருக்குமா.?

மேலும் இதன் கேமரா சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக மிகவும் சிறப்பான கேமரா அம்சமான பொத்தீ ஆனது, நோக்கியா எக்ஸ்6-ல் இடம்பெற்றுள்ளது. இது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க உதவும் ஒரு அம்சமாகும்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் உண்டா.?

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் உண்டா.?

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ்6 ஆனது, இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளுடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு கொண்ட நீக்கமுடியாத லி-அயன் 3,060mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
HMD Global Teases a Charged Up Nokia Smartphone Launch on May 29. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X