அட்டகாசமான நோக்கியா 5.3 வாங்க ரெடியா? அறிமுக அறிவிப்பு ஒருவழியாக வந்தாச்சு!
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன், நோக்கியா நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, எச்எம்டி குளோபல் ஆகஸ்ட் 25ம் தேதி ஊடகவியலாளர் சந்திப்புக்கு செய்தி அழைப்புகளை அனுப்பியுள்ளது. இப்போது எச்எம்டி குளோபல் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை அந்த தேதியில் அறிவிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5.3
நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அழைப்பிதழில், நோக்கியா 5.3 அறிமுகம் செய்யப்படும் என்று தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நோக்கியா நிகழ்ச்சியில் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 8.3 5ஜி போனுடன்மேலும் சில சாதனங்களும் அன்றைய தினம் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

மைக்ரோசாப்ட் டீம்ஸ்
நோக்கியா தயாரிப்பு அறிவிப்புகளுக்கு முன்னதாக இது ஒரு மெய்நிகர் விளக்க அமர்வாக இருக்கும் என்று அழைப்பு கூறுகிறது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் வழியாக மெய்நிகர் விளக்கவுரை ஆகஸ்ட் 25, 2020 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும். அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தயாரிப்பு அறிவிப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கியா தொலைபேசிகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றது. நோக்கியா 5.3 சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

நோக்கியா 5.3 விவரக்குறிப்புகள்
- 6.55' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 2.5 D கர்வுடு கிளாஸ் உடன் கூடிய கார்னிங் கொரில்லா பாதுகாப்பு
- அட்ரினோ 610 ஜி.பீ.யு குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- குவாட்-கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 5 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- டூயல் 4 ஜி VoLTE
- வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz)
- புளூடூத் 4.2
- ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
- யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- 4000 எம்ஏஎச் பேட்டரி
- நிறம்: சியான், சேண்ட் மற்றும் சார்க்கோள் பிளாக்




Click it and Unblock the Notifications