Home
Mobile

நோக்கியா 6, 7 பிளஸ், 8 சிரோக்கோ-வின் இந்திய விலை நிர்ணயம் அறிவிப்பு.!

இந்த ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான இந்திய விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் என்ன.? எந்தெந்த ஸ்மார்ட்போன் எப்போது வாங்க கிடைக்கும்.?

By Muthuraj

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள, எச்எம்டி க்ளோபல் நிறுவனம், இந்தியாவில் அதன் நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த MWC 2018 நிகழ்வில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான இந்திய விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் என்ன.? எந்தெந்த ஸ்மார்ட்போன் எப்போது வாங்க கிடைக்கும்

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. வருகிரியா ஏப்ரல் 6, 2018 முதல் வாங்க கிடைக்கும்.

அம்சங்கள்

அம்சங்கள்

அம்சங்களை பொறுத்தவரை, ஒரு 16: 9 திரை விகிதத்துடனான 5.5 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, அட்ரெனோ 508 ஜிபியூ, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, PDAF மற்றும் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 16எம்பி செய்ஸ் ஆப்டிக்ஸ் ரியர் கேமரா, ஒரு 8எம்பி செல்பீ கேமரா, ஓஸோ ஆடியோ தொழில்நுட்பம் உட்பொதிக்கப்பட்ட மைக், வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட், பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 3000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது. ரூ.25,999/- என்கிற விலை புள்ளியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

அம்சங்களை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, 18:9 திரை விகிதம் கொண்ட 6 இன்ச் முழு எச்டி + காடிஸ்பிளே (1080 x 2160 பிக்சல்கள் தீர்மானம்), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, இரண்டு 12எம்பி டூயல் ரியர் கேமரா (ஒரு எப் / 1.75 துளை + ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ்), ஒரு 16எம்பி செல்பீ கேமரா, கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸ் ஆதரவு, ஓஸோ ஆடியோ தொழில்நுட்பம், 3800mAh பேட்டரி, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

நோக்கியா 8 சிரோக்கோ

நோக்கியா 8 சிரோக்கோ

இறுதியாக, நோக்கியா 8 சிராக்கோ ஆனது ரூ.49,999/-க்கு வாங்க கிடைக்கும். ஏப்ரல் 30 முதல் விற்பனையை தொடங்கும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவானது ஏப்ரல் 20 அன்று தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்சங்கள்

அம்சங்கள்

அம்சங்களை பொறுத்தவரை, 5.5 இன்ச் பி-ஓஎல்இடி டிஸ்ப்ளே, 16: 9 திரை விகிதம், கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, 6ஜிஇ ரேம் மற்றும்128ஜிபி உள்ளடக்க சேமிப்பு, எப் / 1.75 துளை உடனான ஒரு முதன்மை 12எம்பி + 12எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு, ஒரு 5எம்பி செல்பீ கேமரா, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3260mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Global Launches Nokia 6 2018 Nokia 7 Plus and Nokia 8 Sirocco Smartphones in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X