சிக்கியது சாம்சங்; வேண்டுமென்றே குறைந்த விலைக்கு நோக்கியா 8 சிராக்கோ.!
வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று, புது தில்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் சில நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளது.
நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனை, அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், நடந்து முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகமானது. நிகழ்வின் போது இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய மாறுபாடானது ஏப்ரல் மாத வாக்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்திய விலை நிர்ணயம் என்ன.?
அதனை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று, புது தில்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் சில நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளது. இந்நிகழ்வில் என்னென்ன நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பது சார்ந்த அதிகாரபூர்வ வார்த்தைகள் இல்லையென்றாலும் கூட, நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போகளும் இந்திய விலை நிர்ணயம் என்ன.? அம்சங்கள் என்னென்ன? என்பதைப்பற்றி விரிவாக காணலாம்.

நோக்கியா 7 பிளஸ்
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் தான், நோக்கியா நிறுவனத்தின் முதல் 18: 9 டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு 6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனுடன் சில வடிவமைப்பு சார்ந்த ஒற்றுமையை கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
ஆல்-நியூ நோக்கியா 7 பிளஸ் ஆனது, சந்தையில் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த சாதனங்களில் ஒன்றாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதை உறுதி செய்யும் வண்ணம், இக்கருவி ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடனான அட்ரெனோ 612 ஜிபீயூ மூலம் இயக்கப்படுகிறது. ஒரு 12 எம்பி + 13 எம்பி பின்பக்க கேமராவும் மற்றும் ஒரு 16 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

இரட்டை கேமரா
நோக்கியா 7 ப்ளஸ் ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் கூற்றின்படி, நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளானது இரண்டு நாட்கள் நீடிக்கும். ஒரு டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ள நோக்கியா 7 ப்ளஸ் ஆனது, அதன் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்
இந்த ஸ்மார்ட்போனின் வழியாக எச்எம்டி குளோபல் நிறுவனமானது, நோக்கியாவின் வழக்கமான செய்ஸ் (Zeiss) ஒளியியலுடன் ஆன ஒரு ப்ரோ கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது 'இமேஜிங் சூட்' அம்சத்துடன் வருகிறது, இது செல்பீக்களில் சில செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) திறன்களை சேர்க்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா 7 பிளஸ் ஆனது சுமார் ரூ.32,000/- என்கிற புள்ளியை எட்டலாம்.

நோக்கியா 8 சிரோக்கோ
மறுகையில் உள்ள நோக்கியா 8 சிராக்கோ நோக்கியா நிறுவனத்தின் ஒரு ஆச்சரியமான வெளியீடாகும். நோக்கியா 8 சிராக்கோ நிறுவனத்தின் மற்றொரு முதன்மை ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது வைர வெட்டுகளுடன் ஒரு எஃகு உடல் அமைப்பை கொண்டு வருகிறது. ஐபி68 நீர் மற்றும் தூசி சான்றிதழ், வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு போன்ற ஹை-எண்ட் அம்சங்களை கொண்டுள்ளது.

டெலிஃபோட்டோ
நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் டூயல் கேமரா அமைப்பு திகழ்கிறது. ஒரு 12 எம்பி + 12 எம்பி பின்பக்க கேமராவும் மற்றும் ஒரு 5 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. ரியர் கேமராவின் இரண்டாம் நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸாக பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி
6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருந்தாலும் கூட இது ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா 8 சிரோக்கோவின் உலகளாவிய பதிப்பானது சுமார் ரூ.60,000/- என்கிற புள்ளியை எட்டலாம். இருப்பினும் சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் முனைப்பில் கீழ் நோக்கியா 8 சிராக்கோவின் விலை விகிதம் குறைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications