நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் அதன் சிக்னேச்சர் நோக்கியா போன் மாடல்களை இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் புதிய டிஸைனுடன் புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கி அறிமுகம் செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நோக்கியாவின் நான்கு பழைய மாடல்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் இப்போது நோக்கியா 3650 இடம்பெறவுள்ளது.

புதிய தோற்றத்தில் பழைய நோக்கியா 3650

புதிய தோற்றத்தில் பழைய நோக்கியா 3650

நோக்கியா 3650 மாடலை யாரும் மறந்திருக்க முடியாது, இப்போது இந்த நோக்கியா 3650 போனை நோக்கியா நிறுவனம் புதிய டிசைனை மற்றும் 5 ஜி தொழில்நுட்ப ஆதரவுடன் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. போன் வடிவமைப்பாளரான கான்செப்ட் கிரியேட்டர் மற்றும் லெட்ஸ்கோடிஜிட்டல் ஆகியவை KaiOS உடன் உருவாகும் புதிய நோக்கியா 3650 5 ஜி (2021) போனின் ரெண்டர்களைக் வெளியிட்டுள்ளது.

நோக்கியா 8110 4 ஜி பனானா

நோக்கியா 8110 4 ஜி பனானா

5ஜி தொழில்நுட்பத்துடன் தயாராகும் இந்த நோக்கியா 3650 5ஜி 2021 போனின் ரெண்டெர் டிசைன் வீடியோவை இந்த பதிவில் இணைத்துளோம். அதைப் பார்த்து, டிசைன் எப்படி உள்ளது என்ற கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள். நோக்கியா 8110 4 ஜி பனானா மற்றும் நோக்கியா 2720 ஃபிளிப் போன்ற சில கிளாசிக் வகைகளை எச்எம்டி மறுவடிவமைப்பு செய்து உயிர்த்தெழுப்பியது. அதற்குப் பின்னரும் நிறுவனம் பல மாடல்களை ரி-டிசைன் செய்துள்ளது.

WhatsApp புதிய அப்டேட்: காண்டாக்ட் உடன் ஷேர் செய்யும் வீடியோவை இனி 'மியூட்' செய்யலாம்.. எப்படி தெரியுமா?WhatsApp புதிய அப்டேட்: காண்டாக்ட் உடன் ஷேர் செய்யும் வீடியோவை இனி 'மியூட்' செய்யலாம்.. எப்படி தெரியுமா?

இப்போது நோக்கியா 3650 போனுக்கான மறுவடிவமைப்பு நேரம்

இப்போது நோக்கியா 3650 போனுக்கான மறுவடிவமைப்பு நேரம்

எச்எம்டிகுளோபல் நிறுவனத்திற்கு 2020ம் ஆண்டு ரீமேக்கிற்கான ஒரு ஆண்டாக இருந்தது, நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மற்றும் நோக்கியா 6300 மற்றும் நோக்கியா 8000 ஆகிய நோக்கியா மாடல்களையும் நிறுவனம் மறுவடிவமைப்பு செய்துள்ளது. இப்போது நோக்கியா 3650 மறுவடிவமைப்பிற்கு தயாராகிவிட்டது. ரஷ்ய தளமான மொபைல்டெல்போன் நோக்கியா 3650 5ஜி 2021 தயாரிப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

முந்தைய நோக்கியா 3650 சிறப்பம்சம்

முந்தைய நோக்கியா 3650 சிறப்பம்சம்

முந்தைய நோக்கியா 3650 சிம்பியன் ஓஎஸ் சீரிஸ் 60 இல் இயங்கியது, இது 201 x 176 பிக்சல் தீர்மானம் கொண்ட 2.1 டிஎஃப்டி டிஸ்பிளேவை கொண்டிருந்தது. இது பின்புறத்தில் 0.3 மெகாபிக்சல் விஜிஏ கேமராவையும் 4 எம்பி மெமரியையும் கொண்டிருந்தது. இதில் 850 mAh பேட்டரி வழங்கப்பட்டிருந்தது. இது 150 மணிநேர ஸ்டான்பை நேரம் மற்றும் 3 மணிநேர டாக் டைம் நேரம் ஆகியவற்றை வழங்கியது.

Paytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது? சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்..Paytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது? சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்..

இப்போதைய டிசைனில்

இப்போதைய டிசைனில்

இப்போது புதிய பதிப்பில் 8 எம்பி அல்லது 12 எம்பி கேமராவழங்கப்பட்டுள்ளது. 4 ஜி ஆதரவு KaiOS மற்றும் சில அடிப்படை பயன்பாடுகளுடன் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை காட்டிலும் இது மிகவும் மெலிதான மற்றும் நேர்த்தியான பாடி வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் வட்ட கீ-போர்டு கட்டுப்படுத்த எப்படா இருக்கும் என்று தெரியவில்லை. பாலிகார்பனேட் உடலுடன் இது மஞ்சள், ப்ளூ மற்றும் கருப்பு நிறத்தில் 150 டாலர் விலையில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News and Image Source : Concept Creator

Most Read Articles
Best Mobiles in India

English summary
HMD Global Is In The Making Of Brand New Nokia 3650 5G (2021) With KaiOS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X