அக்டோபர் 11: அசத்தலான நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் அக்டோபர் 11-ம் தேதி நோக்கியா 7.1 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் தற்சமயம் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கேமரா உட்பட பல்வேறு அம்சங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்

அக்டோபர் 11: அசத்தலான நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 11-ம் தேதி காலை 11.30 மணி அளவில்
இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 7.1 பிளஸ்:

நோக்கியா 7.1 பிளஸ்:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 710:

ஸ்னாப்டிராகன் 710:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20எம்பி செல்பீ கேமரா:

20எம்பி செல்பீ கேமரா:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Global to host a Nokia smartphone launch in India on October 11: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X