மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9: வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள்.!
நோக்கியா 9 ஆனது வெளிப்படையாக எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கண்ணாடி டிஸ்பிளேவை காட்சிபடுத்துகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பெஸல்-லெஸ் வடிவமைப்பாகவே தோன்றுகிறது.
மொபைல் உலக காங்கிரஸ் (MWC) 2018-நிகழ்ச்சியில் ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது, அந்தவரிசையில் இப்போது எச்எம்டி குளோபல் நிறுவனம் மிகவும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவன நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஜுஹோ சர்விகஸ் தெரிவித்தது என்னவென்றால் இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவத்துள்ளார். மேலும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் டிஸ்ப்ளே:
சீனாவில் இருந்து வெளியாகியுள்ள இந்த லீக்ஸ் புகைப்படம், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வரும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும் கூட, போலியானது அல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பெஸல்-லெஸ்:
இந்த புகைப்படத்தின் கீழ், நோக்கியா 9 ஆனது வெளிப்படையாக எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கண்ணாடி டிஸ்பிளேவை காட்சிபடுத்துகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பெஸல்-லெஸ் வடிவமைப்பாகவே தோன்றுகிறது.

வயர்லெஸ் சார்ஜிங் :
முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளைப் பொறுத்தவரையில், வரவிருக்கும் நோக்கியா 9 சாதனமானது வயர்லெஸ் சார்ஜிங், இரட்டை லென்ஸ் செய்ஸ் கேமரா ஆகியவற்றுடன் கூடிய க்யூஎச்டி தீர்மானம் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் என்றே கூறப்பட்டிருந்தது.

எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல் :
நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 4கே வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டது. பின்புறத்தில், ஒரு எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறுமென கூறப்படுகிறது.


க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி :
இந்த சாதனத்தின் மற்றொரு பிரதான அம்சமாக இதன் ரேம் பகுதி திகழ்கிறது. 6ஜிபி / 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 அந்த ஐபிP68 சான்றிதழ் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர் :
மேலும், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குமா என்பது ரகசியமாகவே உள்ளது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் மற்ற வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில், வெளியான புகைப்படத்தில் கேமராவின் கீழே உள்ள பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் இருப்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது.

சுமார் ரூ.57,896/-
இந்தியாவில் சுமார் ரூ.57,896/- என்ற விலைமதிப்பை பெறுமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9, அதில் இடம்பெறும அம்சங்களை பொறுத்து விலை நிர்ணயத்தில் வேறுபடலாம். இதற்கு முன்னதாக வெளியான கசிவுகள், நோக்கியா 9 ஆனது பல்வேறு மாறுபாடுகளிலும், பல்வேறு டிஸ்பிளே அளவுகளுடன் வெளிவரும் என்று கூறுகின்றன. எனினும், நோக்கியா 9 பல மாறுபாடுகள் வெளியாகும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.


Click it and Unblock the Notifications