மே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.?
அது நோக்கியா N9 என்கிற பெயரின் கீழ், வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்ற அறிமுகம் ஆகவுள்ளது.
நோக்கியா நிறுவனத்தின் பழைய நோக்கியா X தொடர் மொபைல்கள் ஆனது, நோக்கியா X (2018) மற்றும் நோக்கியா X6 என்கிற பெயரில், புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ள நிலைப்பாட்டில், நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, மேலுமொரு "கிளாஸிக் மொபைலான" நோக்கியா N வரிசையின் கீழ், புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கூறப்படும் நோக்கியா N ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன. அது நோக்கியா N9 என்கிற பெயரின் கீழ், வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்ற அறிமுகம் ஆகவுள்ளது.

சீன சான்றிதழ் தளமான Weibo-வில் காணப்பட்டுள்ள இந்த நோக்கியா என்9 ஆனது, பெய்ஜிங்கின் சௌயாங் மாவட்டத்தில் உள்ள சன்லீட்டனில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் வெளியாகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரிஜினல் நோக்கியா N9-ன் அப்டேடட் பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டுமே விற்பனையை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது இந்திய சந்தை உட்பட இதர சந்தைகளுக்கு எப்போது வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.
இதற்கிடையில், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, நோக்கியாவின் மற்றொரு கிளாஸிக் மொபைல் ஆன நோக்கியா எக்ஸ்-ஐ, நாளை புத்தம் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றுவரை லீக்ஸ் தகவலாக வெளியான நோக்கியா எக்ஸ்-ன் முதல் அதிகாரபூர்வமான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஆஃபிஷியல் போஸ்டர் வெளியானாலும் கூட, நாளை சீனாவில் வெளியாகும் நோக்கியா எக்ஸ் ஸ்மாட்ர்ட்போன் பற்றிய எந்த வார்த்தையையும் எச்எம்டி பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான போஸ்டரில் ஸ்மார்ட்போனின் எந்த விவரமும் வெளிபடுத்தப்படவில்லை. ஆனால் (நாளை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியான டீஸர் படத்தின் படி, நிகழும் நோக்கியா நிறுவனத்தின் நிகழ்ச்சியானது, ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடக்கும். இந்த நிகழ்வில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என்பதில் உறுதிப்பாடு இல்லை, இருந்தாலும் டீஸர் படத்தில் நோக்கியா எக்ஸ் என்கிற பெயர் இருப்பதால், அந்த ஸ்மார்ட்போன் நிச்சயமாக அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.
ஒருவேளை, நிகழ்வின் போது வேறு ஒரு ஸ்மார்ட்போன் தொடங்குவதையும் நாம் காணலாம். இணையத்தில் உலாவரும் ஒரு செய்தி ஊடக அறிக்கையின்படி, நோக்கியா எக்ஸ் வரிசையின் கீழ், மொத்தம் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும். அதில் ஒன்று நிலையான நுழைவு-நிலை நோக்கியா எக்ஸ் ஆக இருக்கும், மற்றொன்று மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் களமிறங்கும் நோக்கியா எக்ஸ் 6 ஆக இருக்கும்.
நோக்கியா எக்ஸ்-ன் அம்சங்கள் பற்றிய எந்த வார்த்தையும் வெளியாகவில்லை, ஆனால் நோக்கியா எக்ஸ்6-ன் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நோக்கியா எக்ஸ்6 ஆனது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது, சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போகளை போன்றே பெஸல்லெஸ் வடிவமைப்புடன் கூடிய மேல் பக்க நாட்ச் கொண்டு வெளியாகும்.
மேலும் நோக்கியா எக்ஸ்6 ஆனது இரண்டு வகைகளில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்னாப்டிராகன் 636 SoC கொண்டு ஒன்று வெளியாக, மற்றொன்று மீடியா டெக் P60 SoC உடன் வெளியாகலாம். பின்புறத்தில் ZEISS லென்ஸுடன் கூடிய இரண்டு 12எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா அமைப்பை காண முடிகிறது.
வெளியான தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், நோக்கியா எக்ஸ்6-ன் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்ட மாடல் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பி கொண்டு வெளியாகும். மறுகையில் உள்ள மீடியா டெக் 4சிப்செட் கொண்டு வெளியாகும் மாடல் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டு வெளியாகும். இருப்பினும், இரண்டு மாடல்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்பையும், டிஸ்பிளேவையும் தான் கொண்டிருக்கும்.

மற்ற நோக்கியா ஸ்மார்ட்ப்களைப் போல, நோக்கியா எக்ஸ்6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும். இது தவிர பேட்டரி, செல்பீ கேமரா போன்றே இதர பிரதான அம்சங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. முழுமையான அம்சங்களை பற்றி அறிய நாளை தொடங்கும் உத்தியோகபூர்வமான நிகழ்வு வரை நாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications