64 எம்பி குவாட் கேமரா அமைப்போடு வரும் நோக்கியா 8வி 5ஜி UW- இதோ முழு விவரங்கள்!

|

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன் 64 எம்பி குவாட் பின்புற கேமரா அமைப்போடு அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் அம்சம் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன்

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன்

வெரிசோனின் எம்எம் வேவ் 5ஜி நெட்வொர்க் அம்சத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போனை எச்எம்டி குளோபல் அறிவித்துள்ளது. இதன் விலை 699 டாலராக இருக்கும் அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.51,651 ஆக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் விண்கல் க்ரே வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

6.81 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.81 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிட்ட பதிப்பாக நோக்கியா 8வி 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும். இதில் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 செயலி மற்றும் அட்ரினோ 620 ஜிபியூ மாறுபாட்டோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்டோடு கிடைக்கும். மெமரி விரிவாக்கத்திற்கு மைக்ரோ எஸ்டிகார்ட் ஸ்லாட் வசதியும் இருக்கிறது.

அறிய வாய்ப்பு- ரூ.10,000 இலவசமாக வழங்கும் அமேசான்: இதை மட்டும் செய்தால்போதும்!அறிய வாய்ப்பு- ரூ.10,000 இலவசமாக வழங்கும் அமேசான்: இதை மட்டும் செய்தால்போதும்!

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ கேமரா அம்சத்தை பொருத்தவரையில் இதன் முன்பக்கத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சாரோடு குவாட் கேமரா அமைப்பு வசதி உள்ளது. முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 24 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இணைப்பு ஆதரவுகளாக 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் இரட்டை சிம் ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HMD Global Announced Nokia 8V 5G UW Smartphone With Verizons mmWave 5G Network Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X