லூமியா கேமரா யூஐ உட்பட கைமாறும் 500-க்கும் மேற்பட்ட நோக்கியா டிசைன்ஸ்.!

மைக்ரோசாப்ட் லூமியாவிடம் இருந்து எச்எம்டி க்ளோபலுக்கு கைமாறும் 500 நோக்கியா வடிவமைப்பு காப்புரிமைகள்.

|

ஒருபக்கம் நோக்கியா 8, நோக்கியா 7 மற்றும் நோக்கியா 2 போன்ற நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்க, மறுபக்கம் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் வேறொரு சுவாரஸ்யமான வெளிப்பாடு இருப்பதாகத் தெரிகிறது.

லூமியா கேமரா யூஐ உட்பட கைமாறும் 500-க்கும் மேற்பட்ட நோக்கியா டிசைன்ஸ்!

சமீபத்தில் நோக்கியாமொப் வலைத்தளம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் கீழ் மைக்ரோசாப்ட் மொபைலில் இருந்து சுமார் 500 வடிவமைப்பு காப்புரிமைகளை எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து மைக்ரோசாப்ட் மொபைல் என்ற பிரிவின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு லூமியா ஸ்மார்ட்போன்களை தயாரித்தன என்பதை நாம் இங்கே ன் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி, நோக்கியா 8

ஆகஸ்ட் 16-ஆம் தேதி, நோக்கியா 8

தற்போது, நோக்கியா பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதற்க்கான பிரத்யேக உரிமத்தை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் கொண்டுள்ளது என்பதும், நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது என்பதும் மேலும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி, நோக்கியா 8 என்ற நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பாராத ஏதாவது ஒரு அம்சம்

எதிர்பாராத ஏதாவது ஒரு அம்சம்

வெளியாகியுள்ள தகவலின் கீழ் நோக்கியா 8 என்ற நிறுவனத்தின் உயர் இறுதி தலைமை ஸ்மார்ட்போன் ஆனது பயனர்கள் சற்றும் எதிர்பாராத ஏதாவது ஒரு அம்சம் கொண்டு என்று அறிக்கை யூகிக்கிறது.

லூமியா கேமரா யூஐ அம்சம்

லூமியா கேமரா யூஐ அம்சம்

பல வதந்திகள் மற்றும் கசிவுகள், இந்த ஸ்மார்ட்போன் கார்ல் ஜெயஸ் ஒளியியலுடன் இரட்டை லென்ஸ் பின்புற கேமராவைக் கொண்டிருக்கக்கூடும் என்று காட்டுகின்றன. தற்போது கூடுதலாக இந்த கைபேசியில் லூமியா கேமரா யூஐ அம்சம் இடம்பெறலாமென்று நம்பப்படுகிறது. கேமரா துறையில் மிகவும் உள்ளுணர்வு கொண்ட கேமராக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

500 வடிவமைப்பு காப்புரிமைகள்

500 வடிவமைப்பு காப்புரிமைகள்

லூமியா கேமரா யூஐ ஆனது விண்டோஸ் மொபைல் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதற்காக நோக்கியா மூலம் உருவாக்கப்பட்டது. இந்த இடைமுகத்திற்கான வடிவமைப்பு காப்புரிமை ஆனது தற்போது இடம் மாற்றப்பட்டுள்ள 500 வடிவமைப்பு காப்புரிமைகளில் ஒன்றாகும்.

200-க்கும் மேற்பட்ட வடிவமைப்பு காப்புரிமைகள்

200-க்கும் மேற்பட்ட வடிவமைப்பு காப்புரிமைகள்

குறிப்பிடத்தக்க வகையில்,மைக்ரோசாப்ட் மொபைலுடன் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட வடிவமைப்பு காப்புரிமைகள் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
HMD gets 500 Nokia design patents including Lumia Camera UI. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X