Home
Mobile

வெளுத்து விட்டாப்ல.. வெறும் ரூ.23000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இது புதுசா இருக்கே, என்று சொல்லும்படியான டிசைன் மட்டுமல்லாமல், கஸ்டமைசபிளஸ் பேக் கேஸ் மற்றும் கேமரா அவுட்பிட் ஆப்ஷன்களுடன் எச்எம்டி ஃப்யூஷன் (HMD Fusion) போன் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. 108 எம்பி கேமரா, 1 டிபி மெமரி, விர்ச்சுவல் ரேம், 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த எச்எம்டி ஃப்யூஷன் போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை என்ன? விற்பனை எப்போது? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

எச்எம்டி ஃப்யூஷன் அம்சங்கள் (HMD Fusion Specifications): இந்த எச்எம்டி போனில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது.

வெளுத்து விட்டாப்ல.. வெறும் ரூ.23000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 1TB மெமரி!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த எச்எம்டி ஃப்யூஷன் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

மேலும், விர்ச்சுவல் ரேம் ஆப்ஷன்கள் (Virtual RAM Options) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (MicroSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிரீமியம் போன்களில் கிடைக்கும் ஈசிம் (eSIM) ஆப்ஷன் மற்றும் நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) வருகிறது. இந்த எச்எம்டி போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. மெயின் கேமராவில் ஸ்மார்ட் ஈஐஎஸ் (Smart EIS) டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்டுள்ளது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த செல்பீ ஷூட்டரில் பிக்ஸ்ட் போகஸ் (Fixed Focus) சப்போர்ட் வருகிறது.

இந்த எச்எம்டி ஃப்யூஷன் போனில் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. சைடு-பவர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Power Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 8.32 மிமீ தடிமன் மற்றும் 202.5 கிராம் எடை உள்ளது.

பிளாக் (Black) கலரில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. இருப்பினும், கஸ்டமைசபிள் பேக் கேஸ்களில் ப்ளூ, கிரீன், பிங்க், வயலெட் போன்ற பல்வேறு கலர்கள் வருகின்றன. அதேபோல கேமிங் கிட் (Gaming Kit) ஆப்ஷனும் வருகிறது. பேக் கேஸ்களில் கஸ்டமைசபிள் லைட்னிங் (Customizable Lighting) ஆப்ஷன் வருகிறது.

மேலும், கேமரா எஃபெக்ட்ஸ் (Camera Effects) ஆப்ஷனும் கொண்டிருக்கிறது. இந்த எச்எம்டி ஃப்யூஷன் போனின் விலை ரூ.23,225ஆக இருக்கிறது. முதலில் ஐரோப்பியா நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இங்கு பட்ஜெட்டில் சற்று மாற்றங்கள் இருக்கலாம்.

இந்திய மார்கெட்டில் ஏற்கனவே எச்எம்டி நிறுவனத்தின் கிரெஸ்ட் 5ஜி போன் வெளியாகிவிட்டது. பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்ததால், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதேபோல இந்த எச்எம்டி ஃப்யூஷன் மாடலும் பட்ஜெட்டில் வந்தால் நல்ல வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை. வரும் வாரங்களில் இது தெரிந்து விடும்.

Best Mobiles in India

English summary
HMD Fusion With 108MP Camera 12GB RAM 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X