Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 108MP கேமரா.. 30W சார்ஜிங்.. புதிய HMD ஸ்மார்ட்போன் ரெடி.. எந்த மாடல்?

எச்எம்டி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் எச்எம்டி ஃப்யூஷன் (HMD Fusion) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த புதிய போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி ஃப்யூஷன் அம்சங்கள் (HMD Fusion specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (IPS display) வசதியுடன் வெளிவரும் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது..  புதிய HMD ஸ்மார்ட்போன் ரெடி..

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி (Qualcomm Snapdragon 778G) சிப்செட் வசதியுடன் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய எச்எம்டி போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)ஆதரவுடன் இந்த புதிய எச்எம்டி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.

4800எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (30W fast charging) வசதியும் இதில் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் போகோ பின் (Pogo Pins), வைஃபை 6இ (WiFi 6E), யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போனின் எடை 200 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.25,000 பட்ஜெட்டில் எச்எம்டி ஃப்யூஷன் போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source

Best Mobiles in India

English summary
HMD Fusion smartphone specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X