Home
Mobile

HMD Fusion Sale: ஆரம்பமே ரூ. 7000 தள்ளுபடி.. 1 போன் 6 பாடி பேனல்.. ஆர்டர் பறக்குது.. பேக் பேனல் இலவசமா?

எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் எச்எம்டி பியூஷன் (HMD Fusion) என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாதனமாகும். இந்திய சந்தையில் இந்த புதிய எச்எம்டி பியூஷன் மொபைல் இன் (HMD Fusion Mobile) விற்பனை இன்று முதல் துவங்கியுள்ளது. ஆரம்ப விற்பனை என்பதனால், இந்த போனின் மீது சிறப்பு ஆரம்ப கால துள்ளுபடி மற்றும் ரூ. 5000 மதிப்பிலான கிபிட்களை நிறுவனம் வழங்குகிறது. இதை எப்படி? எங்கிருந்து பெறுவது என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப்போகிறோம்.

எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனத்தின் முதல் இந்திய விற்பனை இன்று முதல் துவங்கியுள்ளது. இது முதல் விற்பனை என்பதனால், இந்த போனின் மீது சலுகை மற்றும் தள்ளுபடியை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனம் எண்ணில் அடங்காத பல அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ளது. குறிப்பாக, இந்த போன் 6 பேக் பேனல் அட்டாச்மென்டை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

HMD Fusion Sale: ஆரம்பமே ரூ. 7000 தள்ளுபடி.. 1 போன் 6 பாடி பேனல்..

ஆரம்பமே ரூ. 7000 தள்ளுபடி.. HMD Fusion என்ற 1 போனுடன் 6 பாடி பேனல்:
இந்த போன் 1 பாடியுடன் 6 வெவ்வேறு விதமான பேக் பேனல்களை ஆதரிக்கும் அம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் தனித்துவமான டிசைன் உடன் HMD நிறுவனம் இந்த புதிய எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதன் ஹைலைட் அம்சமாக இதன் ஸ்மார்ட் அவுட்ஃபிட் சிஸ்டம் (Smart Outfit system) பார்க்கப்படுகிறது. இந்த போனின் பேக் பேனல்களில் 6 பின் கனெக்டரை நிறுவனம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு பயனரும், அவர்களுக்கு விருப்பமான பேக் பேனல் அவுட்ஃபிட்டை தனியாக வாங்கி, இத்துடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது நீங்கள் ஒரு கேமர் என்றால், உங்களுக்கென்று HMD நிறுவனம் இப்போது இந்த போனுடன் கேமிங் அவுட்ஃபிட் (Gaming Outfit) பேனலை வழங்குகிறது. அதேபோல், பிளாஷி கேமரா சர்க்கிளிங் LED லைட் அவுட்ஃபிட் (Flashy Outfit with a camera-circling LED light) போன்றவற்றை வழங்குகிறது.

HMD Fusion விலை என்ன?
இது தவிர, ரக்டு அவுட்பிட் (Rugged Outfit) மற்றும் கேசுவல் அவுட்ஃபிட் (Casual Outfit) என்று பல பேனல்களை வழங்குகிறது. இப்படி பல தனித்துவமான அவுட்ஃபிட் பேக் பேனல்களை HMD வழங்குகிறது. இதில் எத்தனை அவுட்ஃபிட்கள் இந்திய சந்தைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகாமல் மர்மமாக இருக்கிறது. HMD Fusion ஸ்மார்ட்போன்கள் ஜென்2 ரிப்பேரபிலிட்டி (Gen2 repairability) அம்சத்தை ஆதரிக்கிறது.

மற்ற எந்த போனிலும் இல்லாத இந்த அம்சத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 22,999 ஆகும். ஆனால், HMD பிராண்ட் தற்போது ஆரம்ப கால சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இந்த போனை ரூ. 17,999 என்ற குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதற்கு மேல் கூடுதலாக ரூ. 2000 வரையிலான தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் இப்போது பெற முடிகிறது.

அடேங்கப்பா.. இலவசமாக ரூ. 5999-க்கு கிபிட் இருக்கா?
இதன் மூலம் HMD Fusion விலை (HMD Fusion price) ரூ. 15,999 என்ற மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. இதுதவிர, இந்த போனை ஆரம்ப கால விற்பனையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ. 5,999 விலை மதிப்பிலான இலவச கிபிட்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விற்பனையில் HMD Fusion போனை வாங்கும் நபர்களுக்கு கேமிங் அவுட்ஃபிட், RGB LED லைட் உடன் பிளாஷி அவுட்ஃபிட் ஆகிய இரண்டு பேனல்கள் இலவசமாக வாங்க கிடைக்கிறது.

எச்எம்டி பியூஷன் சிறப்பம்சம் (HMD Fusion):
- 6.56" இன்ச் HD+ LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்
- 8GB ரேம் (RAM) மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ்
- 1TB வரையிலான microSD ஸ்டோரேஜ்
- 108MP டூயல் ரியர் கேமரா
- 50MP செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 14
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Fusion sale today Buy Now and Get Rs 2000 Discount and FREE Gifts Worth Rs 5999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X