Home
Mobile

மாத்தி யோசிச்சு எல்லாரையும் கவர்ந்துடீங்க HMD.. 1 போன்ல 6 பேக் பேனல்-ஆ? அடேங்கப்பா ஒவ்வொன்றும் ஒரு விதம்..

எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் விரைவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான எச்எம்டி பியூஷன் (HMD Fusion) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனம் உலக சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தற்போது இந்த சாதனம் இந்திய சந்தைக்குள் கால் பதிக்கவுள்ளது என்று HMD நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இந்த போன் 1 பாடியுடன் 6 வெவ்வேறு விதமான பேக் பேனல்களை ஆதரிக்கும் அம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் தனித்துவமான டிசைன் உடன் HMD நிறுவனம் இந்த புதிய எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதன் ஹைலைட் அம்சமாக இதன் ஸ்மார்ட் அவுட்ஃபிட் சிஸ்டம் (Smart Outfit system) பார்க்கப்படுகிறது. இந்த போனின் பேக் பேனல்களில் 6 பின் கனெக்டரை நிறுவனம் வழங்கியுள்ளது.

மாத்தி யோசிச்சு எல்லாரையும் கவர்ந்துடீங்க HMD.. 1 போன்ல 6 பேக் பேனல்-ஆ

எச்எம்டி பியூஷன் ஸ்மார்ட்போன்ல 6 பேக் பேனல்-ஆ (HMD Fusion Smartphone):

இதன் மூலம் ஒவ்வொரு பயனரும், அவர்களுக்கு விருப்பமான பேக் பேனல் அவுட்ஃபிட்டை தனியாக வாங்கி, இத்துடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது நீங்கள் ஒரு கேமர் என்றால், உங்களுக்கென்று HMD நிறுவனம் இப்போது இந்த போனுடன் கேமிங் அவுட்ஃபிட் (Gaming Outfit) பேனலை வழங்குகிறது. அதேபோல், பிளாஷி கேமரா சர்க்கிளிங் LED லைட் அவுட்ஃபிட் (Flashy Outfit with a camera-circling LED light) போன்றவற்றை வழங்குகிறது.

இது தவிர, ரக்டு அவுட்பிட் (Rugged Outfit) மற்றும் கேசுவல் அவுட்ஃபிட் (Casual Outfit) என்று பல பேனல்களை வழங்குகிறது. இப்படி பல தனித்துவமான அவுட்ஃபிட் பேக் பேனல்களை HMD வழங்குகிறது. இதில் எத்தனை அவுட்ஃபிட்கள் இந்திய சந்தைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகாமல் மர்மமாக இருக்கிறது. HMD Fusion ஸ்மார்ட்போன்கள் ஜென்2 ரிப்பேரபிலிட்டி (Gen2 repairability) அம்சத்தை ஆதரிக்கிறது.

எச்எம்டி பியூஷன் ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் (HMD Fusion Specifications):

இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தாங்களாகவே கோளாறு உள்ள பாகங்களை மாற்றி சாதனத்தை ரிப்பேர் செய்துகொள்ளலாம். இதற்காக சேவை மையங்ள் மற்றும் சர்வீஸ் செண்டர் வாசல்களை அணுக வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய HMD Fusion ஸ்மார்ட்போன் சாதனம் 6.56" இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை ஆதரிக்கிறது.

இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC) உடன் 8GB ரேம் (RAM) மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு பயனர்கள் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) வழியாக 1TB வரையிலான ஸ்டோரேஜ்ஜை அணுகலாம். இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வெளிவரும்.

இந்த புதிய எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி (Battery) உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) ஆதரவை கொண்டுள்ளது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது 108MP டூயல் ரியர் கேமராவை (dual rear camera) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50MP செல்பி கேமராவை (selfie camera) கொண்டுள்ளது. இது IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் பாதுகாப்புடன் வருகிறது.

எச்எம்டி பியூஷன் விலை (HMD Fusion Price):

இதன் அறிமுகம் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தோராயமாக ரூ. 23,499 ஆக இருக்கலாம் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த பட்ஜெட் செக்மென்ட்டில் எந்த போனிலும் 108MP கேமராவுடன் பேனல் அட்டாச்மெண்ட் அம்சங்கள் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
HMD Fusion Might Come To India With Gaming Outfit Flashy Outfit Rugged and Casual Outfit Back Panels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X