Home
Mobile

இறங்கி அடிச்ச NOKIA HMD கம்பெனி.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. அறிமுகமானது புது மொபைல்.. எந்த மாடல்?

நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம் தொடர்ந்து எச்டிஎம் பெயரில் போன்களை அறிமுகம் செய்தது வருகிறது. அதன்படி எச்எம்டி இன்று கூட இந்தியாவில் ஒரு அட்டகாசமான போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது எச்எம்டி க்ளோபல் (HMD Global) தற்போது எச்எம்டி ஃப்யூஷன் (HMD Fusion) போனை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி ஃப்யூஷன் அம்சங்கள் (HMD Fusion Specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறங்கி அடிச்ச NOKIA HMD கம்பெனி.. அறிமுகமானது புது மொபைல், எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2) 4என்எம் சிப்செட் வசதியுடன் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நிட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது அசத்தலான ஸ்மார்ட்போன்.

50எம்பி செல்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட் ரெயிட் கேமர என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

5000mAh பேட்டரி உடன் எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Dust and water resistant) உடன் இந்த அட்டகாசமாான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் 202.5 கிராம் ஆகும். அதேபோல் இந்த போன் தற்போது கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இறங்கி அடிச்ச NOKIA HMD கம்பெனி.. அறிமுகமானது புது மொபைல், எந்த மாடல்?

எச்எம்டி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அமேசான் தளத்தில் நவம்பர் 29-ம் தேதி மதியம் 12.01 மணிக்கு வாங்க கிடைக்கும். மேலும் அமேசான் தளத்தில் இந்த போனுக்கு அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வங்கி சலுகைகளுடன் சேர்த்து இந்த போனை ரூ.15,999 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உடன் இலவசமாக எச்எம்டி கேஷுவல் அவுட்ஃபிட் (HMD Casual outfit), எச்எம்டி ஃப்ளாஷி அவுட்ஃபிட் (HMD Flashy Outfit), எச்எம்டி கேமிங் அவுட்ஃபிட் (HMD Gaming Outfit) போன்ற சாதனங்களுக்கும் வாங்கக் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Fusion Launched in India: check specifications price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X