இன்னமும் 3.5மிமீ ஆடியோ ஜாக்.. NOKIA-வா கொக்கா.. கேமரா கிரிப், 120Hz டிஸ்பிளே, OIS கேமரா, IP65 உடன் புது போன்!
வயசானலும் உன் ஸ்டைலும் அழகும் மாறவில்லை என்பது போல நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் கொண்டிருந்தாலும் கூட.. இன்னமும் எச்எம்டி ஸ்மார்ட்போன்களில் 3.5மிமீ ஆடியோ ஜாக்கை சேர்க்கிறது.
அந்த வரிசையில் எச்எம்டி நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடுலர் ஸ்மார்ட்போனான (Next Generation Modular Smartphone) எச்எம்டி பியூஷன் 2 (HMD Fusion 2) மாடலிலும் 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறவுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் ஆனது எச்எம்டி பியூஷன் ஸ்மார்ட்போனின் அப்கிரேட் வெர்ஷன் ஆக இருக்கும்.

எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளதால் இது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எச்எம்டி பியூஷன் ஸ்மார்ட்போனுடன் அறிமுகப்படுத்தப்பட்டதை போலவே இந்த ஸ்மார்ட்போனிலும் புதிய ஸ்மார்ட் அவுட்ஃபிட்கள் இடம்பெறும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது எச்எம்டி மீ (HMD Meme) வழியாக கிடைத்துள்ள தகவல்களின்படி, எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் ஆனது புதிய போகோ பின் 2.0 உடன் பல வகையான ஜென் 2 ஸ்மார்ட் அவுட்ஃபிட்களை (Smart Outfits Gen 2) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் அவுட்ஃபிட்ஸ் என்றால் - ஆறு ஸ்மார்ட் பின்கள் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைக்கக்கூடிய அவுட்ஃபிட்களை கஸ்டமைஸ் செய்யலாம்.
இதில் கிக்ஸ்டாண்ட் கொண்ட கேஷுவல் அவுட்ஃபிட், வயர்லெஸ் சார்ஜிங் அவுட்ஃபிட், ஒரு ரக்ட் அவுட்ஃபிட், கேமிங் அவுட்ஃபிட், கேமரா கிரிப் அவுட்ஃபிட், ஃபிளாஷி அவுட்ஃபிட், ஸ்பீக்கர் அவுட்ஃபிட், க்யூஆர் மற்றும் பார்கோடு அவுட்ஃபிட் மற்றும் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அவுட்ஃபிட் ஆகியவைகள் அடங்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் அவுட்ஃபிட்கள் ஆனது முன்னதாக அறிமுகமான பர்ஸ்ட் ஜெனரேஷன் எச்எம்டி பியூஷன் ஸ்மார்ட்போனுக்கு இணக்கமானதாக இருக்காது.
எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?
- 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு
- ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- 6.58-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 6s Gen 4) சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- ப்ளூடூத் 5.3
- டூயல் ஸ்பீக்கர்கள்
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- விலை ரூ.15,000 - ரூ.20,000 க்குள் இருக்கும்
சமீபத்தில் எச்எம்டி நிறுவனமானது 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பழைய நோக்கியா ஆஷா போன்களை (NOKIA Asha Phone) நினைவூட்டும் படியாக - எச்எம்டி டச் 4ஜி (HMD Touch 4G) என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது இந்த மாடலை - "இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஹைப்ரிட் போன்" (First hybrid phone launched in India) என்று கூறுகிறது அதாவது இது ஒரு ஃபீச்சர் போனுக்கும், ஸ்மார்ட்போனுக்கும் (Feature Phone - Smartphone) இடையே ஒரு பாலமாக செயல்படும்.
எச்எம்டி டச் 4ஜி ஹைபிரிட் போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போனின் 64 ஜிபி ரேம் + 128 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.3,999 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது எச்எம்டி இந்தியா வலைத்தளம் வழியாக சியான் மற்றும் டார்க் ப்ளூ ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் விற்கப்படுகிறது.
எச்எம்டி டச் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 3.2-இன்ச் க்யூவிஜிஏ (QVGA)டச் ஸ்க்ரீன், டூயல் சிம் இணைப்புக்கான ஆதரவு மற்றும் ஃபிளாஷ் யூனிட் உடன் 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ், எஸ்30 பிளஸ் டச் யூஸர் இன்டர்பேஸ் மற்றும் குவிக்-கால் பட்டன் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








