ஒட்டுமொத்த மார்க்கெட்டும் அதிர போகுது.. 108எம்பி கேமரா.. 108எம்பி கேமரா.. வருகிறது புது HMD போன்.. எந்த மாடல்?
எச்எம்டி நிறுவனம் அடுத்து எச்எம்டி பியூஷன் 2 (HMD Fusion 2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் நிறங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
எச்எம்டி பியூஷன் 2 அம்சங்கள் (HMD Fusion 2 specifications): 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட் உடன் எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகர்ல அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில உள்ளன.
IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய எச்எம்டி போன் வெளிவரும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) உடன் இந்த புதிய எச்எம்டி பியூஷன் 2 போன் வெளிவரும். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
5500எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய எச்எம்டி பியூஷன் 2 அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி நிறுவனம்.
என்எப்சி, புளூடூத் 5.3, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எச்எம்டி பியூஷன் 2 போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எச்எம்டி பியூஷன் 2 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்எம்டி நிறுவனம் தொடர்ந்து கம்மி பட்ஜெட்டில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
photo credit: gizmochina


Click it and Unblock the Notifications








